அம்மாவின் மடியில் மொட்டக இருந்த மழலை மணம் வீசும் பூவகின்றாள்
குமரியாக குடும்பத்தில் கூடுகின்றாள் பெண்!
மின்னும் மின்னலாக அங்கும் மிங்கும் வலம் வந்து, எல்லோருடைய மனதிலும் மங்காத இடம் பிடிக்கின்றாள் பெண்!
கல்யாணம் செய்து பத்தினி பெண்ணாக புகுகின்றாள் பெண்!
குடும்ப தலைவியாக தலைமை பொறுப்பை ஏற்கின்றாள்
வீரியம் கொண்ட மாதராக வீட்டுத் தொழிலையும், நாட்டுத்தொழிலையும் சமமாக செய்கின்றாள் பெண்!
காலத்தில் கர்ப்பிணியாக பத்துமாதத்தில் பத்திரமாய் ஆண் மகனை பெற்றெடுத்து அம்மா ஆகின்றாள் பெண்!
பிள்ளைகள் வளர வளர ஓய்வின்றி ஓடுகின்றாள் பெண்!
கருப்புநிற கருகூந்தல், வெள்ளை நிறமாக பல்லை காட்டுகின்றது
பார்ப்பவரை பரவசப்படுத்திய அழகிய மேனி காற்றில் கரைந்து விட்டது
எல்லோருக்கும் அன்பு காட்டும் வீரமாதவாக மாறிவிடுகின்றாள் பெண்!