இன்று ஆரம்பமாகும் ஆகஸ்ட் (எசல) மாதம் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வரும் அழகிய மாதமாகும். மாதத்தின் ஆரம்பத்திலேயே நம் கலாச்சாரத்தின் ஓர் அங்கமான பெரஹெராவின் ஞாபகங்களை உணர்கிறோம். அதேபோல் சுற்றுச்சூழலை நேசிக்கும் பிரண்டிக்ஸ் எமக்கு, இந்த மாதம் மிகவும் நெருங்கிய ஒரு தினத்தை கொண்டுள்ளது. இது சர்வதேச சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் ஆகும். நாம் இயற்கையை பாதுகாக்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
அது மட்டும் அல்ல,”நிலைத்தன்மை எப்பொழுதும் பாதுகாக்கும் பிரண்டிக்ஸ்” ஒட்டுமொத்த சிறப்பிற்கான அங்கீகாரத்தைப் பெற்று ‘கிரீன் இண்டஸ்ட்ரி’ பிளாட்டினம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது, இது நம் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது.
மேலும் இங்கு, குறைந்த கார்பன் உபயோகம் மற்றும் காலநிலைக்கு ஏற்ற உற்பத்திகளுக்கான தங்க விருதுகளும் பிரண்டிக்ஸ் எமக்கு கிடைத்தது.
அந்தப் பெருமிதத்துடன் இந்த மாதத்தில் அடியெடுத்து வைக்கின்றோம்.
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ரேணுகா பண்டாரிகொட