பஞ்ச பூதங்களில் ஒருவன் ஆன நான்,
பூமியில் முப்பாகம் நான்,
வளம் செழிக்க உதவும் நான்,
தண்ணீர் பேசுகின்றேன்..!
சுத்தம் செய்கின்றேன் நான் உம்மை! ஐயகோ …ஓ
அசுத்தம் செய்கிறீர்கள் நீங்கள் என்னை..
தாகம் தீர்க்க செய்கிறேன் நான் உம்மை..! ஐயகோ …ஓ
வறண்டு போக செய்கிறீர்கள் நீங்கள் எம்மை..
மனித இனமே அஞ்சுகிறேன் உங்களைக் கண்டு, அஞ்சி கொஞ்சிக்கிறேன்!
எம்மை சேமிக்காமல் விட்டாலும் பரவாயில்லை..
அசுத்தம் ஆக்காதீர்கள் என்று..
மறந்து விடாதீர்கள்! நான் இல்லை என்றால் நீங்கள் இல்லை என்பதை..
மறந்து விடாதீர்கள் டிசம்பர் மாதம் என்னால்தான் உங்களில் பலர் இல்லை என்பதை ..
நான் இல்லை என்றால் உங்கள் சந்ததிக்கும் மகிழ்வு இல்லை என்பதை .
அண்டத்தில் அனேகம் நானே..
உங்கள் உயிரும் நானே..
இருந்தும் கெஞ்சுகின்றேன் அழிக்காதீர்கள் எம்மை… அழிக்காதீர்கள் எம்மை…
( மரம் வளர்த்து மழை வர செய்யுங்கள்..
மழை வர செய்து மழைநீர் சேமியுங்கள் …
மழை வர செய்து மழைநீர் சேமியுங்கள் …)
நன்றி.
V.சைலேந்தினி