உலகின் பல முன்னணி ஆடை வர்த்தக நாமங்களுக்கு உயிர் கொடுத்த பிராண்டிக்ஸ், இலங்கையில் அதிக அந்நிய செலாவணியை உருவாக்கும் எமது நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக நாமங்களின் ஒன்றாகும். வணிக நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு பரந்த பார்வையுடன் பிராண்டிக்ஸ் குடும்ப உறுப்பினர்கள் என்ற வகையில், சமுதாயத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் எங்கள் பொறுப்புகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். மற்றவர்களை மதித்தல், நேர்மை மற்றும் சமூக உணர்வோடு சிறந்து விளங்கும் ஒரே குடும்பத்தின் குழந்தைகள் என்ற வகையில் எங்கள் மதிப்புகளால் நாம் நன்கு உருவாக்கப்படுகிறோம். எனவே, நாட்டிற்கும், சமூகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் சேவை செய்வதற்கான தூய்மையான நோக்கம் எமது இரத்தத்தில் பதிந்துள்ளது.
பிராண்டிக்ஸின் மதிப்புகளால் உருவாக்கப்பட்டுள்ள நாம், விழிப்புணர்வோடு உலகுக்கு தீர்வுகளை வழங்கிவருவதில் கடமையாற்றிக் கொண்டிருப்பதுடன், நாங்கள் பல ஆண்டுகளாக நாட்டிற்கும் இப் பூமித் தாய்க்கும் உள்ள கடமைகளை சரிவர நிறைவேற்றி வருகிறோம். 2007 ஆம் ஆண்டு தொடங்கிய, எங்கள் நிலையான பயணம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் எங்கள் குழுவிலிருந்து பயனடைந்துள்ளனர்.
எங்கள் நிலைத்தன்மையின் பாதைச்சுவடுகள் காரணமாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒரு முறை மட்டுமல்லாமல் பல முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். இது எங்கள் சூழல் நட்பு பயணத்திற்கு நாங்கள் பெற்ற சிறந்த அங்கீகாரம் ஆகும்.
2007 இல் திறக்கப்பட்ட சீதுவை பசுமை தொழிற்சாலை, 2017 இல் தொடங்கப்பட்ட மட்டக்களப்பு தொழிற்சாலை, அதன் பின்னர் திறக்கப்பட்ட இரம்புக்கனை தொழிற்சாலை ஆகியவை நமது சூழல் நட்பு முயற்சிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். இவற்றிட்க்கு மேலதிகமாக, உணவு கழிவுகளை கட்டுப்படுத்தி அவற்றின் மூலம் உரம் தயாரிக்கும் திட்டங்கள் மற்றும் சூரிய பேனல்களைப் பயன்படுத்தி சக்தியை உற்பத்தி செய்தல், சுற்றுச்சூழலுக்கு வெளிப்படும் கார்பனின் அளவைக் குறைத்தல், பிளாஸ்டிக் நீர் போத்தல்களின் பயன்பாட்டை முற்றிலுமாக அகற்றுவது உட்பட பல திட்டங்கள் எமது குழுமம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.
சுற்றுச்சூழலுக்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தி, 2023இல் அடைய எதிர்பார்க்கும் ஐந்தாண்டு நிலைத்தன்மை திட்டத்தை 2019 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைத்தோம், அதன்பிரகாரம் 2023 இல் நாம் அடையவேண்டிய வளிமண்டல, நீர்மண்டல மற்றும் பூகோளத்தைப் பாதுகாப்பதற்கான நோக்கங்களை நாங்கள் அமைத்துள்ளோம்.
வளிமண்டலத்திற்கான எங்கள் முன்முயற்சியாவது, ஆடைத் தொழிலால் வளிமண்டலத்திற்கு வெளியாகும் கார்பனின் அளவை ரத்து செய்வதாகும். இந்த நோக்கத்திற்காக, 2019/20 நிதியாண்டில் எங்கள் வளாகத்தில் பயன்படுத்தப்பட்ட CFL மின்குமிழ்களுக்கு பதிலாக LED மின்குமிழ்களை பயன்படுத்தத் தொடங்கினோம், தற்பொழுது இச் செயல் நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கின்றது. இதற்க்கு மேலதிகமாக, கொக்கலை, சீதுவ, மீரிகம, வத்துபிட்டிவல, பொலன்னருவா மற்றும் பியகம தொழிச்சலைகளில் உள்ளிட்ட எமது நிறுவனத்திற்குரிய 10 வளாகங்களில் 7 மெகாவாட் சூரியசக்தியை உற்பத்தி செய்கிறோம். எங்கள் இலக்குகளை நோக்கி செல்லும்போது சூரியசக்தி மற்றும் உயிர்வாயு போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து சக்தியை உருவாக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம். அதன்படி, நாங்கள் தற்போது 9 மெகா வாட் சூரிய சக்தியை குழுமம் முழுவதும் உற்பத்தி செய்து வருகிறோம்.
நீர் மண்டளத்திற்கான எங்கள் முன்முயற்சியில் நீர் வீண்விரயமாகுவதனை ரத்து செய்வதும், எங்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதும், சுற்றுச்சூழலுக்கு அபாயகரமான இரசாயனங்கள் வெளியிடுவதை முற்றிலுமாக நிறுத்துவதும் ஆகும். அதன்பிரகாரம் எங்கள் உறுப்பினர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக எங்கள் குழுமம் முழுவதும் UV நீர் சுத்திகரிப்பு பிரிவுகளை அமைத்துள்ளோம். அதேபோல், நாம் இயற்கையாகவே பெறும் மழைநீரை நிர்வகிப்பதன் மூலம் நீர் வீண்விரயமாகுவதை ரத்து செய்ய முடிந்துள்ளது.
பூகோளத்திற்க்கான எங்கள் ஐந்தாண்டு இலக்குகள் கழிவுகளை மீள்சுழற்சி செய்வது மற்றும் மறுபயன்பாடு செய்வதாகும். இந்த நோக்கத்திற்காக, எங்கள் மட்டக்களப்பு மற்றும் இரம்புக்கன தொழிற்ச்சாலைகளில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிவு மறுசுழற்சி பிரிவுகளை நாங்கள் அமைத்துள்ளோம். இதனால், எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்காக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்து செயல்பாடுகளையும் செய்து வருகின்றோம். இலங்கையில் உள்ள எங்கள் வளாகத்தில் மாத்திரமல்லாமல் இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள எங்கள் தொழிற்சாலை வளாகத்திலும் இந்த பணியை நாங்கள் மேற்கொள்கிறோம்.
இயற்கையை நாம் எந்த அளவிற்கு அதிகமாக மதிக்கிறோம், நேசிக்கிறோம், நேர்மையாக இருக்கிறோமோ அவ்வளவிற்கு இயற்க்கை நமக்கு பதிலளிக்கிறது. இயற்கையை மதிக்கும் ஒரு பெரிய குடும்பத்தின் நேர்மையான உறுப்பினர்களாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஒரு பெரிய பணியை நாங்கள் முழு மனதுடன் நிறைவேற்றி ஒரு அழகான உலகத்தை எதிர்கால சந்ததியினருக்கு பரிசளிப்போம்.