அவள் பெயரால் சதுணி வெரோனிகா. உள்ளார்ந்த திறமைகள் நிறைந்த இவள், வெலிசரவில் உள்ள பிராண்டிக்ஸ் நிறுவனத்துடன் 2018 இல் பிராண்டிக்ஸ் குடும்பத்தில் இணைகிறாள். அன்றிலிருந்து இன்று வரை, அவள் தனது திறமைகள் மற்றும் முயற்சிகள் காரணமாக தொழில் முன்னேற்றத்தை மிகச் சிறந்த முறையில் அடைந்து வருகிறார். பிராண்டிக்ஸ் குடும்பத்தின் வெற்றிகரமான பெண்ணாக திகழும் அவள் சுற்றுச்சூழலை நேசிப்பதில் அவளை சுற்றியுள்ள அனைவரினது மனங்களிலும் ஒரு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறாள்.
ஒரு மனிதன் வயதுக்கு ஏற்ப முதிர்ச்சியடையும் போது அவனது பொறுப்புகளை உணர்ந்து கொள்வதைப் போலவே, சுற்றுச்சூழலுக்கும் தனக்கு ஒரு கடமை இருக்கிறது என்பதை அவள் உணர்ந்துகொள்வது 2018 ஆம் ஆண்டு. அவள் உண்ணும் பழங்களிலிருந்து விதைகளை முளைக்க வைப்பதன் மூலம் தனது பணியைத் தொடங்குகிறாள். முதலில் சுமார் 10 கன்றுகளுடன் தொடங்கப்பட்ட அவளது பராமரிப்பில் இப்போது சுமார் 200 தாவரங்களின் வளர்த்து வருகிறாள். அவ்வாறு பயிரிடப்பட்ட பழக் கன்றுகளை பன்சலைகள் , பள்ளிகள் போன்ற பொது இடங்களில் நாட்டி வருகிறாள். அவள் சேகரிப்பில் இருந்து கன்றுகளை தேவைப்படுபவர்களுக்கு தாராளமாக வழங்குகிறாள். அவ்வாறு 2019 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்திற்காக தனது நிறுவனத்திற்கு தாவரங்களை நன்கொடையாக வழங்க அவளால் முடிந்தது. இந்த அற்புதமான பணிக்கு தனது சகோதரி மற்றும் பல சகோதரர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக அவள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றாள்.
பசுமை நெசவு (ஹரித வியமன) எனும் கருப்பொருளின் கீழ் அவள் ஆரம்பித்த இந்த மகத்தான நற்பணி தனக்கு சுய ஆறுதலளிக்கிறது என்று அவள் கூறுகின்றாள். அவள் சம்பாதித்ததில் ஒரு சிறிய பகுதியை செலவழித்து அவற்றில் பொலித்தீன் உறைகளை விடுமுறை நாட்களில் தன் கைகளால் நடவு செய்கிறாள். அவ்வாறு அவள் பயிரிட்ட தாவரங்களில் கும்புக், இலுப்பை, கொம்பரக்கு, ரம்புட்டான், ஜம்பு, தூரியான், சீத்தாப்பழம், தேசிக்காய், தோடை, நாவட்பழம் , மற்றும் புளி ஆகியவை அடங்கும். சில தொழிற்சங்க நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் மரம் நடும் நடவடிக்கைகளில் அவள் மரக்கன்றுகளை இலவசமாக வழங்குகிறார். இது அவளுக்குள் இருக்கின்ற உன்னதமான நோக்கத்தைக் காட்டுகிறது.
இவ்வாறு அவள் தாவரங்களை வழங்குவது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பயன்பெறும் நோக்கத்துடனேயே வழங்குகிறாள்.இயற்க்கை அன்னைக்காகவே வழங்குகின்றாள். இறுதியாக, இந்த கட்டுரையை அவளது சொந்த வார்த்தைகளால் முடிக்க வேண்டியது எமது கடமையாகும். “ஒரு மரத்தை நட்டு, அதை அன்போடு கவனித்துக்கொள்வோம். எம்மால் உலகத்திற்கு பெரிய விடயங்களை செய்ய முடியாவிட்டாலும், ஒரு மரக்கன்றை நடுவதன் மூலம் ஏதாவது செய்ய முடியும். அது எங்கள் கடமை மற்றும் பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். ஆகவே, எதிர்காலத்திற்காக ஒரு மரத்தை நடுவோம். ” இதுவே அவளுடைய குறிக்கோள் ஆகும். பிராண்டிக்ஸின் முன்றலில் விழித்தெழுந்த அவள், இவ்வாறான மகத்தான செயலினை உலகிற்கு முன்வைக்கிறாள். இதன்படி பெருமை வாய்ந்த இவள் பிராண்டிக்ஸின் ஒருவர் மாத்திரமே.
எனவே சதுணி, உங்களின் இந்த முயற்சி எதிர்காலத்தில் மென்மேலும் வளர்ச்சியடைய நாம் வாழ்த்துகின்றோம்!