மனிதர்களாகிய எமக்கு அமைந்திருக்கும் இந்த வாழ்க்கை மிகவும் உன்னதமானதாகும். நாம் அனைவரும் அந்த உன்னதமான வாழ்க்கையை துன்பமின்றி அனுபவிக்க விரும்புகிறோம். ஆனால் வாழ்க்கை என்பது புல் மீது உள்ள ஒரு பனித்துளி போன்றது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதன்பிரகாரம், நாம் பெற்ற இந்த வாழ்க்கையை எந்த நேரத்திலும் இழக்க நேரிடும். அதுவே தர்மத்தின் நியதியகும். அவ்வாறு இழக்கப்படுகின்ற ஒரு ஜீவனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வாய்ப்பு எமக்கு கிடத்தால் அது நாம் பெற்ற பாக்கியமே. எப்போதும் மனித நேய குணங்களினால் வளர்ந்துக் கொண்டிருக்கும் பிராண்டிக்ஸ் குடும்பமாகிய எமக்கு, பல்வேறு காரணங்களுக்காக உயிருக்கு போராடும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உயிர் கொடுக்க முடிந்ததுள்ளது. அது தொடர்ச்சியாக பதின்மூன்று ஆண்டுகளாக இரத்த தானம் செய்கின்றமையால் ஆகும்.அதிலும் குறிப்பாக தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக தனியார் துறையில் மிகப்பெரிய இரத்த தானம் செய்பவர்களும் நாங்களே.
இலங்கை முழுவதிலும் பரந்துள்ள உள்ள பிராண்டிக்ஸ் தாயின் பிள்ளைகளான நாங்கள், மற்றொரு உயிரைக் காப்பாற்றும் உன்னத உணர்வுடனேயே இந்த தொண்டு நிகழ்வில் பங்கேற்கின்றோம். இந்த நற்சிந்தனையுடன் சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முற்படும் நம்முடைய, பிராண்டிக்ஸ் குடும்பத்தின் குணத்தையே பிரதிபலிக்கிறது. இதன் மூலம், கடந்த 13 ஆண்டுகளில் 36,000 யூனிட் இரத்தத்தை தானம் செய்ய முடிந்துள்ளது. இது 36,000 க்கும் மேற்பட்ட உயிர்களை வாழவைக்க உதவியுள்ளது. 2016, 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில் இலங்கையில் உள்ள ஒவ்வொரு 100 இரத்த தானம் செய்பவர்களில் ஒருவர் பிராண்டிக்ஸ் உறுப்பினராக இருந்திருக்கின்றார் என்பதனை நாம் பெருமையாக நினைவுகூறுகின்றோம். அதுமட்டுமல்லாமல், எங்கள் குழு அவசர மருத்துவ சிகிச்சைக்கான இரத்தத்திற்கான அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக வார இறுதி தினங்களுக்கு பதிலாக வார நாட்களில் இந்த இரத்த தான திட்டங்களை தொடங்கியுள்ளது. ஐந்து நாட்கள் ஆயுட்காலம் கொண்ட பிளேட்லெட்டுகள் காலாவதியாகும் முன் ஒரே வாரத்திற்குள் பயன்படுத்தகூடியவாறு இது அமைகின்றது.
இப்பணி மனிதநேயத்தை மனதில் கொண்டு செய்யப்பட்டிருந்தாலும், எமது நற்பணிக்காக நாம் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தோம். அது 2019/2020 ஆம் ஆண்டிற்கான இலங்கையில் தனியார் துறையில் அதிகளவான இரத்த தானம் செய்தமைக்காகும். தேசிய இரத்த மாற்று சேவை இந்த அங்கீகாரத்தை எமக்கு வழங்கி இருந்தது. ஒரு தசாப்தம் அல்லது பத்து ஆண்டுகள் என்பது