தேசத்தின் மறுமலர்ச்சிக்கான மக்கள் தொண்டு

தேசத்தின் மறுமலர்ச்சிக்கான மக்கள் தொண்டு

சமூகசேவை என்பது பிராண்டிக்ஸ் குடும்பத்தின் எமக்கு புதிய விடயமல்ல. நாங்கள் எங்கள் வணிக இலக்குகளை நோக்கி பயணிக்கும்போது, ​​சமுதாயத்திற்கான எங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றுகிறோம். இங்கு நாங்கள் எங்கள் உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும், அதேபோன்று வெளிச் சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் சேவைகளை செய்துள்ளோம் தொடர்ந்தும்  சேவைகளை செய்வோம்.

எமது மக்கள் தொண்டு தொடர்பாக கூறும்பொழுது மறக்க முடியாத அம்சங்களில் ஒன்றுதான் பிராண்டிக்ஸ் சமூக பொறுப்புணர்வு (CSR) பிரிவு. ஒரு மரத்திற்கு தண்டு போலவே, எங்கள் சமூகசேவை செயல்பாடுகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருப்பது எமது நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) பிரிவு ஆகும். பிராண்டிக்ஸ் எமது சிறப்பம்சம் என்னவென்றால், நாட்டில் ஏதேனும் நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பங்களில் எமது சமூகப் பொறுப்புகளையும் தேவைகளையும் உணர்ந்து நம்முடைய திறனுக்கு ஏற்றவாறு நிறைவேற்றுவதாகும்.

இலங்கை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகமும் எதிர்கொண்டிருக்கும் பாரிய ஆபத்து தொடர்பாக நாம் அனைவரும் நன்கு அறிவோம்.  இலங்கைக்கு அதிக அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் ஒரு துறையாக, அது நம்மை ஆழமாக பாதிக்கிறது. ஆனால் இவை எதுவுமே நமது சமூகப் பொறுப்புக்குத் தடையாக இல்லாமல். சமுதாயத்திற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் மக்கள் தொண்டுகளையும் நாங்கள் தொடர்ந்தும் செய்கின்றோம். மினுவாங்கொடை பகுதியில் சமீபத்தில் நாம் மேற்கொண்ட சில சமூகப் பணிகள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மினுவாங்கொடை காவல் நிலையம் என்பது பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஒவ்வொரு நாளும் பலர் சேவைகளைப் பெற வரும் ஒரு பொது இடமாகும். ஆனால் காவல் நிலையத்தின் கூரை பாழடைந்த நிலையிலேயே இருந்தது, இது காவல்துறை அதிகாரிகளுக்கும் சேவைகளைப் பெற வந்த பொதுமக்களுக்கும் ஒரு சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கான சிறந்த தீர்வாக மினுவங்கொடை பிராண்டிக்ஸ் நிறுவனம் மற்றும் எமது நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) பிரிவினரின் தலையீட்டால் கூரையை சரிசெய்ய முடிந்ததுடன், காவல் நிலைய உத்தியோகபூர்வ விடுதியில் பற்றாக்குறையாக இருந்த மின்விசிறிகளையும் சரிசெய்து கொடுக்க எம்மால் முடிந்தது.

மேலும், பொது சுகாதார மருத்துவ அதிகாரியின் அலுவலகம் இந்த நாட்களில் அதிகமானவர்கள் சென்றுவரும், அதிக மக்கள்ளின் கவனத்தை ஈர்த்த இடமாகும். அவ்வாறு ஏராளமான மக்களுக்கு விலைமதிப்பற்ற சேவையை வழங்கி வரும் மினுவாங்கொடை பொது சுகாதார மருத்துவ அதிகாரியின் அலுவலகம் பாழடைந்த நிலையிலேயே இருந்தது.  அலுவலகத்தின் அனைத்து உபகரணங்கள் உற்பட முழு அலுவலகத்தையும் புதுப்பிக்கவும், வண்ணம் தீட்டவும், வண்ணமயமாக்கவும் எம்மால் முடிந்தது.

சமூக சேவைகள் மீதான எங்கள் கவனம் மினுவாங்கொடை பிரதேசத்தில் மாத்திரம் இருக்கவில்லை. ரிதீகம பிராண்டிக்ஸுடன் இணைந்து, மதுராவலை காவல் நிலையத்தில் மிக முக்கியமான தேவையாக கருதப்பட்ட சோதனைச் சாவடியின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டோம். இன்று, இது அப்பகுதி மக்களுக்கும், காவல்துறையினருக்கும் ஒரு சிறந்த சேவையாக அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், கோவிட் நோய் பரவுவதால் காரணமாக, காலி பிரதேச வைத்திய சேவையினருக்கு அத்தியாவசிய தேவையாக கருதப்பட்ட 100 மருத்துவமனை படுக்கைகளை கொக்கலை பிராண்டிக்ஸ் மற்றும் எமது நிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) பிரிவினரின் நன்கொடையாக வழங்க முடிந்திருந்தது. இவை சமீப காலங்களில் நாம் செய்த சில சமூக பங்களிப்புகள் மட்டுமே. சமுதாயத்திற்கான மரியாதையுடன் நேர்மையாக செயல்படும், பிராண்டிக்ஸ் மதிப்புகளால் வளர்க்கப்பட்ட நாம், எமது தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், இவ்வாறான சமூக சேவைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *