எம் அன்னை இவள்

எம் அன்னை இவள்

வாழ்வதனை வசந்தமாக்க வந்த வைரமும் –  நீயே !

வானமத்தின் கவலைகளை தீர்த்து வைக்கும் தாயவளும் – நீயே !

பசுமைதனை உலகிற்கு தருபவளும் நீயே !

பச்சிளம் பாலகர்களின் பாலாக தோன்றுவதும் நீயே !

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் – ஓராயிரம்

சிறப்புகள் உண்டு என்பதை மனித இனமும் அறியும் !

ஒவ்வொரு சிறப்பிலும் முதலிடம் உனக்கே !

ஒன்றல்ல இரண்டல்ல உன் பெருமை கூற !

ஐம்பூதம் என்று உனை ஞாலமதில் கூறினாலும்

ஐயமில்லா செயலதனை ஆற்றுவதும் நீயே !

நீர் என்று பெயர் பெற்று நீ இருப்பதாலும்

நீல நிறக்கடலிலே சேர்ந்திருப்பதாலும்

இவ்வுலகில் உனை எண்ண மனிதனுக்கு நேரமது இல்லை

உன் நினைவு கொள்வதற்கு காலமிது தானே !

பல தினங்கள் இவுலகில் கொண்டாடினாலும்

பல லட்சம் மக்கள் இதை அறிந்திருந்தாலும்

இது தினத்தில் உன் பெருமைதனை கூறுவதில்

இன்பமதை பெறுகின்றேன் அகமகிழ்ந்து நானும் !

நன்றி
யோ.சதீஸ்க்கா

 

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *