ஒலிம்பிக் பதக்க பட்டியலில் முதல் இலங்கையரின் பெயர் - டங்கன் வைட்

ஒலிம்பிக் பதக்க பட்டியலில் முதல் இலங்கையரின் பெயர் - டங்கன் வைட்

டங்கன் வைட், மார்ச் 1, 1918 இல் பிறந்தார், ஜூலை 3, 1998 அன்று வார்விக்ஷயரில் இவ்வுலகை நீத்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இலங்கையர் இவர் ஆவார். லண்டனில் 1948 கோடைகால ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

களுத்துறைக்கு அருகில் உள்ள லத்பந்துர கிராமத்தில், திரு. டங்கன் வைட் இன் பிறந்தார். ஒரு காலத்தில் இலங்கை பிரிட்டிஷ் காலனியாக இருந்தது, அதன்போது ஜான் பெர்னார்ட் வைட் மற்றும் சிசிலியா ஹாக் வைட் ஆகிய ஆங்கில பெற்றோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை தான் டங்கன் வைட். கண்டி புனித திருத்துவக் கல்லூரியில் படித்த அவருக்கு “ட்ரினிட்டி லயன்” எனும் விருது வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர் ஒரு சிறிய ஒழுக்காற்று பிரச்சினை காரணமாக விருதை இழந்தார்.

டங்கன் வைட்டின் ஒலிம்பிக் வெற்றி மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரம் ஆகிய இரண்டும் ஒரே ஆண்டில் நடந்த வியத்தகு வியத்தகு விடயங்கள் ஆகும். இந்த தடை தாண்டி ஓடும் ஓட்டப்போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ராய் கவுரன் நான்கு வருடங்களாகப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார், ஆனால் டங்கன் வைட் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். வைட் 51.8 வினாடிகளில் போட்டியினை நிறைவு செய்தாலும் வெறும் 0.7 வினாடிகள் வித்தியாசத்தில் ராய் கவுரன் முதல் இடத்தைப் பிடித்தார். இச் சிறிய வித்தியாசம் கூட ஒலிம்பிக்கின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

அவரது ஒலிம்பிக் வெற்றியைத் தொடர்ந்து, டிரினிட்டி கல்லூரி நடத்திய விழாவில் திரு. வைட் அன்புடன் வரவேற்கப்பட்டார், அங்கு அவருக்கு “ட்ரினிட்டி லயன்” என்ற இழந்த பட்டத்தை மீண்டும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் உரையாற்றிய திரு. வைட், “எனது ஒலிம்பிக் வெற்றி ஒரு கெளரவமான வெற்றியாக இருந்தாலும், “சிங்கம் “என்ற முறையில் நான் இங்கு பெற்ற விருது எனக்கு மேலும் கெளரவத்தை சேர்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.”

பல வருடங்கள் கழித்து இலங்கையால் அவருக்கு வெளியிடப்பட்ட தபால் தலை அவரை கெளரவிக்கும் வகையில் அமைந்திருந்தது. டங்கன் வைட் 1998 இல் இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் இவ் உலகை நீத்தார்.

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *