கிளைகள் பரப்பி கம்பீரமாய் நிற்கும் பாரிய மரத்திற்கு முடியும் கனமழையில் கூட நமக்கு நனையாமல் நிழல் அளிக்க. மழை பெய்யும் போது ஒரு பெரிய மரத்தின் அடியில் மழையிலிருந்து தப்பிக்க முயன்ற ஒருவருக்கு இந்தக் கதையின் யதார்த்தம் புரியும். பிராண்டிக்ஸ் குடும்பமும் ஒரு பெரிய, கிளைகளை பரப்பிய மரம் போன்றது. எனவே பிராண்டிக்ஸ் நிழலில் பாதுகாப்பாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
முழு உலகிற்கும் இது மிகவும் கடினமான நேரமாகவே அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் தொற்றுநோயை உலகம் எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், உலகின் பெரும் வல்லரசுகள் என்று கருதப்படும் நாடுகள் கூட இந்த பேரழிவை எதிர்கொண்டு தவிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். கொரோனா என்பது உலக சுகாதாரத்தை மட்டுமல்ல உலக பொருளாதாரத்தையும் பாதித்த ஒரு வைரஸ் ஆகும். பல தொழில்கள் வீழ்ச்சியடைந்ததால் பலர் வேலை இழந்துள்ளனர் என்று நாம் கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம். ஒருவருக்கு உதவ முடியும் என்பதை எமது அன்றாட வாழ்க்கையை கடத்திச்செல்வதே கடினமாக உள்ள காலகட்டம் இது.
இந்த சவாலான காலங்களில் கூட, எங்கள் பிராண்டிக்ஸ் நிறுவனம் பாதுகாப்பான வேலை சூழலை உருவாக்கி, அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு கொள்கைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் எங்கள் வேலைகளைப் பாதுகாக்கிறது. மேலும், நிதி நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும், எங்கள் சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை உட்பட எல்லாவற்றையும் சரியான முறையில் வழங்க எங்கள் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
“பிராண்டிக்ஸ் எம்மவரின் நேசம்” இவ்வாறு குறிப்பிடுவது பிராண்டிக்ஸ் குடும்ப உறுப்பினர்களுக்காக நாம் மேற்கொண்ட மற்றுமொரு புதிய நற்பணியாகும். எங்கள் குழுவில் 36,300 பிராண்டிக்ஸ் உறுப்பினர்களுக்கு சுமார் ரூ .3200 மதிப்புள்ள உலர் உணவு பொருட்களை இங்கு விநியோகிக்க முடிந்தது. இந்த நற்பணியின் மூலம், உலர் உணவுப் பொருளை பிராண்டிக்ஸ் உறுப்பினர்கள், இலங்கையில் எமது கூட்டு நிறுவனங்களில் உறுப்பினர்கள் மாற்றுமல்லாமல் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட மூன்றாம் தரப்பு ஊழியர்களுக்கு வழங்க முடிந்தது.
பிராண்டிக்ஸ் குடும்பத்தில் உள்ள நாங்கள் எப்போதும் இத்தகைய நிறுவனத்தில் பணிபுரியும் அதிர்ஷ்டசாலிகள். நாட்டின் பொருளாதாரத்திற்கு வலிமை அளிக்கும் ஆடைத் தொழிலில் உள்ள எங்கள் சொந்த மக்களுக்கு எங்கள் நன்றிக்கடனை தெரிவிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விடயமாகும்.