ஆண்டுகள் இரண்டு ஆனது இங்கே
ஆனாலும் தொடருது கொரோனாவின் சூழ்ச்சியே
மாறிடும் மனித வாழ்க்கையில் இன்றே
மாற்றங்கள் மட்டும் மாறாது நீளுதே
வீசிடும் காற்றினையும் சுவாசிக்க தடையே
மாசாகி விட்டது கொரோனாவின் பிடியினாலே
முகத்தில் கவசம் அணிந்திட வேண்டுமே
முழு நாளும் வீட்டினில் இருந்திடல் நலமே
தனிமையை விரும்பி ஏற்றிட வேண்டுமே
வீணான பயணங்கள் செய்திட கூடாதே
வீண் விபரீதம் ஆகிடும் அதனாலே
ஓடிடும் நாட்களை ஓய்வுடன் கழித்தாலே
தோற்றிடும் கிருமியின் தொல்லையும் தீர்ந்திடுமே
கைகளை தினமும் கழுவினால் போதுமே
வைரஸின் தாக்கமும் குறைந்திடும் மெல்லமே
கூட்டம் கூடி, குதூகலம் செய்யாமலே
வீட்டினில் இருந்து நோயினை விரட்டுவோமே
கா. மேனகா
மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் நிறுவனம்
சிறந்த ஆக்கங்களுக்காக பரிந்துரைக்கப்படுகின்றது