பஞ்சபூதங்களில் ஒருவனாகிய நான்
பூமியின் முப்பங்கான நான்
உங்களின் உயிருக்கு முக்கிய
பங்காகிய தண்ணீர் பேசுகிறேன் !
உங்கள் தாகம் தீர்க்க
செய்கிறேன் நான்,
வறண்டு போக செய்கிறீர்கள்
என்னை மரங்களை வெட்டி!
சுத்தம் செய்கிறேன்
நான் உங்களை, ஆனால்!
நான் தேங்கி நிற்கும் இடமெல்லாம்,
அனைத்து கழிவுகளையும் கொட்டி
அசுத்தமாக்கி
அவமதிக்கிறீர்கள் என்னை!
மரங்களை வெட்டி பூமியில்
என்னை தொலைத்து விட்டு
செவ்வாயில் தேடுகிறீர்கள் என்னை
வேதனையாக இருக்கிறது
எனக்கு!
அணை ஒன்று கட்டி
என்னை காக்க வழியில்லை
ஆயிரம் கோபுரங்கள் எழுப்பி
அழகு பார்க்கிறீர்கள்!
கிணறுகள் காணாமல் போய்!
வாய்க்கால்கள் வெற்றி போய்!
ஓடைகள் ஒடுங்கி போயிற்று
காரணம்?
மரங்களை வெட்டி
அழித்து விட்டீர்கள் என்னை
இல்லையெனில் மழையாக வந்து
நிரம்பியிருப்பேன் ஊற்றுகளாய்
மலையில் தோன்றி
கடலில் வீணடைகிறேன்