கொரோனா எனும் பெருந்தொற்று சீனாவில் அமைந்துள்ள ஊகானில் டிசம்பர் மாதம் 2019 ஆம் ஆண்டு முதலில் தோன்றியது. அதனால் கொரோனவை Covid- 19 என்று பெயர் வைத்து அழைத்தனர். கொரோனா ஆனது ஒரு வைரசு வகையைச் சேர்ந்த நுண்ணங்கி ஆகும். இது வைரசு வைகையான நோய் என்பதனை சார்ஸ் (மருத்துவர்) கண்டுபிடித்தார். அத்துடன் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவக்கூடிய நோய் என்றும் கூறினார். பின் இவர் அதை தன் நண்பரிடமும் சீனா அரசிடமும் கூறினார். ஆனால் முதலில் சீனா அரசு அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது பின் கொரோனவினால் ஏற்பட்ட பாதிப்புக்களின் (உயிர்ச் சேதங்களின்) அடிப்படையில் சீனா அரசு ஏற்றுக்கொண்டது. இவ்வாறே கொரோனா வைரசு பரவத் தொடங்கியது.
முதலில் கொரோனா வைரசு ஆனது விலங்குகளை தாக்கியது. அதன் பின் மனிதர்களை தாக்கத் தொடங்கியது. இதன் பரவல் அதிவேகமாக நடைபெற்றது. கொரோனா வைரசானது சீனாவைத் தொடர்ந்து பல நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. கொரோனா வைரசானது பரவிய நாடுகளாக இந்தியா, இலங்கை, இத்தாலி, அமெரிக்கா போன்ற பல நாடுகளை குறிப்பிடலாம். கொரோனா வைரஸினால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா முதலிடம் வகிக்கின்றது. கொரோனா வைரசானது மனிதர்களின் நுரையீரலை அதிகம் பாதிக்கின்றது. இது நுரையீரலை அதிகம் பாதிக்கின்றமையால் அதிக உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.
கொரோனா வைரசு தொற்றுக்குள்ளானவர்களிடம் பல அறிகுறிகள் தென்படும். தென்படும் அறிகுறிகளாவன காய்ச்சல், இருமல், தொண்டைவலி, தடிமன் மற்றும் மூச்சு எடுப்பதில் சிரமம் போன்ற பொதுவான அறிகுறிகள் ஆகும். கொரோனா வைரசினால் ஏற்படும் சிக்கல்கள் ஆவன சளி காய்ச்சல் (நிமோனியா), தீவிர சுவாச தொற்று, உடல் உறுப்புக்கள் செயலிழப்பு மற்றும் சில வேளைகளில் இறப்பு என்பன ஆகும். கொரோனா வைரசின் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவேண்டும். அவையாவன, அரச வைத்தியசாலையின் சேவையை பெற வேண்டும். முகக்கவசம் அணிதல் (Face Mask), மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், ஆபத்து நிலைமைகளை கொண்ட குழுவினருடன் நெருங்கிய தொடர்பினை தவிர்த்தல் மற்றும் குணம் அடையும் வரை போதிய அளவு ஓய்வு அடைதல் என்பன ஆகும்.
கொரோனா வைரசானது பரவியதைத் தொடர்ந்து புதிய வகையான வைரசு ஒன்று பரவி வருகின்றது. புதியதாக பரவி வரும் கொரோனா வைரசின் பெயர் டெல்டா வைரசு ஆகும். இந் நோயானது கொரோனா வைரசை விட பயங்கரமான நோயாகும். இந் நோயானது அதிகமாக பரவி வருகின்றமையால் அதிக உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றது. இந் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அவ் நடவடிக்கைகள் ஆவன, கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு தூய நீரினால் கழுவிக்கொள்ளுங்கள், இருமும் பொழுதோ அல்லது தும்மும் பொழுதோ கைக்குட்டை, ரிசு கடதாசி மற்றும் மொலங்கையின் உற்புறத்தைக்கொண்டு மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ளுங்கள், கைகாளால் வாய், மூக்கு, கண், என்பனவற்றை அடிக்கடி தொடுவதை தவிர்த்தல். சுவாசத் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பினை தவிர்த்துக்கொள்ளல் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளல் என்பனவாகும்.
கொரோனா வைரசு மற்றும் டெல்டா வைரசிலும் இருந்து மக்கள் அச்சம் கொண்டு உள்ளனர். இதனால் மக்கள் பயப்படாமல் விழிப்புணர்வுடன் இருந்தால் இந் நோயிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்க்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பல உள்ளன. அவற்றுள், கொரோனா வைரஸ் நோயைக் கண்டு வீணாக பதட்டமடைய தேவையில்லை. அதேநேரத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். ஊடகங்களில் பரவி வரும் உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையில்லாத செய்திகளைக் கண்டு குழப்பமடைய தேவையில்லை. மேலும் அத்தகைய செய்திகளை மற்றவர்களுக்கு பரிமாரித்தலையும் தவிர்க்க வேண்டும், அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் ஆரோக்கியத்திற்க்கான முன்னெச்சரிக்கை அவசியம், தற்காத்துக்கொள்ள இருமல், தும்மல் உள்ளவர்களிடமிருந்து குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும், அடிக்கடி கைகளை சவர்க்காரம் போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும், கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு, வாயை தொடுவதை தவிர்க்கவும் மற்றும் இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ளவும் என்பன காணப்படும்
இவற்றின் மூலம் கொரோனா வைரசு மற்றும் டெல்டா வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இவ் நடவடிக்கைகளின் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
யசோதா
மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் நிறுவனம்