வரும் முன் காப்போம், கொரோனாவை ஒழிப்போம்

வரும் முன் காப்போம், கொரோனாவை ஒழிப்போம்

முன்னுரை

கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் உள்ள ஊஹான்  மாநிலத்தில் டிசம்பர் மாதம் 2019ம் ஆண்டு தோன்றியது. அதனால் கொரோனாவை Covid19 என்றும் அழைப்பர். இந்தக் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அதே வேளையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று செயற்படும் வீரர்களும் அதிகரித்துள்ளனர். அப்படிப்பட்ட வீரர்களைப் பார்ப்போமானால்

  • மருத்துவர்கள் / தாதிமார்கள்
  • துப்பரவு பணியாளர்கள்
  • காவல் துறையினர்
  • வணிகர்கள்
  • மருந்தகங்கள்
  • உணவு விநியோக ஊழியர்கள்

மருத்துவர்கள் / தாதிமார்கள்

நாடு முழுவதும் மருத்துவர்களும் தாதிமார்களும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களை  குணப்படுத்தும் முயற்சியில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் தீவிரம் காட்டி வருகின்றனர்

துப்பரவுப் பணியாளர்கள்

சுகாதாரத்தை பேணும் நோக்கில் உயிரையும் துச்சமாக எண்ணி துப்பரவுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 10 மணி நேரத்திற்கும் மேல் பணியாற்றி வருவதால் மருத்துவர்களுக்கு இணையாக மதிக்கப்படுகிறார்கள்

காவல் துறையினர்

கொரோனா தடுப்புப்பணிகளில் முன் வரிசையில் நின்று களப்பணியாற்றும் காவல் துறையிலும் பலருக்கு கொரோனா பரவி உள்ளது. இருந்தும் அவர்கள் இரவு பகல் பார்க்காமல் அனைத்தையும் தாங்கிக்கொண்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

வணிகர்கள்

கொரோனா ஊரடங்கு நாட்களில் சிறு வணிகர்கள், சில்லறை வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், மீன் வியாபாரிகள், தயிர், பால் வியாபாரிகள் போன்றவர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் எந்த தடையுமின்றி மக்களுக்கு கொண்டு சேர்க்க பெரும் பாடு பட்டு உழைத்தனர்

 
மருந்தகங்கள்

நாடு முழுவதும் மருந்தகங்கள் நாள்  விடுப்பு இன்றி செயல்படுகின்றன. ஊரடங்கு காலத்தில் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருந்துகள் தடையின்றி கிடைக்க உறக்கமின்றி பணியாற்றி வருகின்றனர்

உணவு விநியோக ஊழியர்கள்

உணவு விநோயாக ஊழியர்கள் ஊரடங்கு காலத்தில் உணவகம் இன்றி தவித்த பெற்றோர் மற்றும் உறவினர்களை விட்டு வேற்று ஊரில் பணியாற்றும் இளைய சமுதாயத்தினருக்கு பேருதவியாக இருந்தனர்

இருமலும் தும்மலும் இடைவிடக் காச்சலும் இருப்பது அறிகுறியென உணர்”

கொரோனா விலங்குகளுக்குப்பின் மனிதர்களை தாக்கும் நோயாக மாறிவிட்டது. கொரோனாவின் அறிகுறிகளை பார்ப்போமானால் சளி, இருமல், தும்மல், காய்ச்சல், மூச்சுத்திணறல், வாசனை இழப்பு, வாந்தி பேதி, வயிற்றோட்டம் ஆகியவை ஆகும்.

கொரோனா தொற்று நம்மை தாக்காமல் இருக்க நாம் முகக்கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை சவர்க்காரம் அல்லது Sanitaizer மூலமாக நன்றாக சுத்தம் செய்ய்ய வேண்டும்.  “காய் கொண்டு முகம் தொட வேண்டாம் கலிவியா பின் மெய் தொடுதல் நன்று”

கொரோனா நோய் தாக்கினால் நமக்கு 14 நாள் கழித்து தான் தெரியும் வெளியூரில், வெளிநாட்டில் இருந்து வந்தால் கொரோனா test எடுத்துக்கொள்ள வேண்டும் (Antigen, PCR). “கடல் கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று”

மக்களே இவ்வளவு அழிவுக்குப் பின்னும் நாங்கள் தான் எங்களை தனிமையில் தனித்திருத்தல் வேண்டும். கூட்டம் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும், ஒருவர் பாவித்த பொருளை தீண்டாமல் இருத்தல் வேண்டும். வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் கை, கால்களை கழுவி  விட்டு அல்லது குளித்துவிட்டு போட்டுச்சென்ற ஆடைகளை நன்றாக கழுவி வெயிலில் உலர்த்திக் காயப்போட வேண்டும்

கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்”

ஒரு நாளில் 2 வேளையாவது நீராவி பிடிப்பது மிக அவசியம் இப்படிச் சின்ன சின்ன விஷயங்களில் நாங்கள் எப்படி துப்பரவாக இருக்கின்றோமோ அந்தளவிற்கு வீட்டிலிருக்கும் வயதானவர்கள், சிறுவர்கள் என்பவரை இந்தத் தொற்று தீண்டாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்  “கை கூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு”

நாங்கள் இதுமட்டுமல்ல நமது வாழ்வாதார உணவுகளிலும் தூய்மையான இலைக்கறி வகைகள், பழ வகைகள், கண்டிப்பாக சத்தான சின்ன சின்ன மீன்கள், முட்டைகள், நெத்தலி கருவாடு இப்படியான உணவுகளை உட்கொண்டு எமது உடலை ஆரோக்கியமாக வைத்திருத்தல் அவசியம் ” மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று”

சுகாதார சுத்தத்தால் மட்டுமல்ல உண்ணும் உணவுகளிலும் எமக்கு அண்டும் தொற்றிலிருந்து நீங்கி தூரமாக இருக்கலாம். அடிக்கடி சூடான பானங்கள் கஷாயம், ஊநல், பட்டை நீர் அருந்துவதும் அவசியம். அது மட்டுமல்ல தோடம்பழச்சாறு, தேசிக்காய்ச்சாறு போன்ற பனங்களிலும் நல் சத்துக்கள் உள்ளன. இவைகளை நாம் உட் கொண்டு  கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளலாம்

முடிவுரை

உலக மக்கள் வாழ்க்கையையும் புரட்டி போட்டு விட்டது இந்தக்கொடிய நோய் கொரோனா பலரது வாழ்வாதாரத்தையும், உயிரையும் அழித்து இந்தப் பெருந்தொற்று காலத்திலும் தங்களது உயிரை துச்சமாக எண்ணி போராடும் வீரர்களை வாழ்த்துவோம் வாழ்வோம்.

“தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தருக்கு கட்டியணைத்துப் பரவும் தவிர்”

நன்றி

வரும் முன் காப்போம் விழிப்புணர்வோடு இருப்போம் கொரோனாவை  ஒழிப்போம்

ம. சிவதர்சி

மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் நிறுவனம்

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *