பிராண்டிக்ஸ் ரம்புக்கன உளவியல் ஆலோசகர் ரொஷானி பண்டார, “வியமன்” தொலைக்காட்சியுடன் ‘விழித்தெழுந்த வாழ்வு’ என்ற நேர்காணலில் நம் அனைவருக்கும் முக்கியமான ஒரு தலைப்பில் கலந்துரையாடினார். அதுதான் மனித உறவுகளின் தொடர்பு என்ற தலைப்பு.
உறவுகள், நீண்ட கால உறவு மற்றும் குறுகிய கால உறவு என்று இரண்டு வகையான உறவுகள் உள்ளன, . குறுகிய கால உறவுகள் குறிப்பிட்ட சிறிய கால தொடர்பாடல் ஆகும் மற்றும் நீண்ட கால உறவுகள் உணர்வுகளுடன் பிணைப்பு என்று அழைக்கப்படுகின்றன.
உறவுகளைப் பொறுத்தவரை, அவை பரந்த அளவில் காணப்படுகின்றன. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவுகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இடையிலான உறவுகள், காதல் உறவுகள் மற்றும் திருமண உறவுகள் என பல மனித உறவுகள் நம் மத்தியில் உள்ளன.
உறவைத் தொடங்குவது எளிது, ஆனால் அதைப் பராமரிப்பது கடினம். குறிப்பாக காதல் உறவில் அல்லது திருமணத்தில், அந்த உறவுகளுக்கு இடையில் நம்பிக்கை, புரிதல் மற்றும் இலகுவான தன்மை இழக்கப்படும்போது, உறவு சிதைகிறது. நீங்களும் ஒரு உறவில் இருக்க வேண்டிய நிர்பந்தத்தில், அழுத்தத்தில் இருந்தால், நீண்ட கால உறவைப் பேணுவது கடினம் ஆகும்.
பணியிடத்திலும் குடும்ப வாழ்க்கையிலும் வலுவான உறவைப் பேணுவதற்கு பரஸ்பர நம்பிக்கையும் புரிதலும் முக்கியம். அப்படித்தான் காதல் உறவைப் புரிந்துகொள்ளும் திறன் குறைவாக இருந்தால், சந்தேகம், மன அழுத்தத்துடன் , சுதந்திரத்தை இழந்து வாழ வேண்டும். இது தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அந்த உறவுகள் பிரிந்து செல்லும் வழியாகவும் அமைகிறது.
உறவைப் பேணுவதில் வரும் பிரச்சனைகளை எப்படி குறைப்பது மற்றும் சமாளிப்பது என்பது பற்றி நாம் குறிப்பாக அக்கறை கொள்ள வேண்டிய விடயமாகும். பிரச்சனைகள் வரும்போது தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம். அதேபோன்று உறவுமுறை முறியும் போது அதனை திறந்த மனதுடன் நோக்க வேண்டும். அதேபோல், செவிமடுப்பதும் பொறுமையும் ஒரு வலுவான பிணைப்பைப் பராமரிக்க உதவுகின்றது.
இதற்கிடையில், பிராண்டிக்ஸின் மதிப்புகள் வலுவான உறவைப் பராமரிக்க உதவுகின்றன. பிராண்டிக்ஸின் மதிப்புகளுக்குள் நாம் வாழ்ந்தால், நாம் இயல்பாகவே மற்றவிடயங்களை மதிக்கப் பழகிவிட்டோம். அதேபோல, நாம் பராமரிக்கும் உறவு நேர்மையானதாக இருந்தால், அதில் நிம்மதியாகவும் ஆறுதலாகவும் உணர்வோம். நீங்கள் நீண்ட காலத்திற்கு மகிழ்ச்சியான உறவைப் பேண விரும்பினால் இவை அனைத்தும் முக்கியமான விடயங்கள் ஆகும்.