தண்ணீரில் பிறந்து
தண்ணீரில் முடிவது மனிதன்
மட்டும் அல்ல உலகமும் ..
தன்னலம் இன்றி நீரை
சேமிப்பதே பொதுநலம்
மரத்தின் நிழலும் தாகத்தின்
தாகம் தீர்க்க அவை இல்லாமல்
வேறு எதுனாலும் அவை தர இயலாது …
மாலை மங்கும் நேரத்தில் மேகத்தின்
கரு விழிகள் இந்த பூமியை நோக்கி
வட்டமிட சீரிய காற்றுடன் கூடவே
ஒய்யாரமாக சப்தம் எழுப்பும் இடி மின்னல்களின்
இடையே விண்ணை பிளந்து மண்ணிற்கு
உதயம் ஆகும் எங்கள் காக்கும் தெய்வம்
மழைக்கு கோடான கோடி நன்றிகள் …
நேற்று கவிதைகளை
தண்ணீராக செலவு செய்தோம்
இன்று தண்ணீரை சிக்கனமாக சேமிக்க
வழி சொல்வோம்…
நீரின்றி அமையாது உலகு …
E . விவேஷாலினி