தண்ணீரே ! தாய் நீயாய் ஆனீரே !

நிலந்தனில் முப்பங்கை நீராகப்
பெற்றவளே!
மலர்ச்சோலை மணந்திடவே வானுயிர்த்து
வந்தவளே!

ஏறி குளம் குட்டையென ஏற்றமுடன்
நிறைந்தவளே !
உன்னாலே உலகியக்கம் ஒப்பின்றி
நடக்கிறது !
உன்வரவு இல்லாமல் உலகெல்லாம்
தவிக்கிறது!

உன்வரவு மேல் உயர்ந்திடவே உலகெல்லாம்
அழுகிறது !
அணைதன்னில் நீதேங்கி  ஆறுதலை
தருகிறது !
மனையெங்கும் நின்னாட்சி மதிப்புடனே
ஆள்கின்றது!

சுவைகூடி ஒன்றாகி எவ்வுயிரும்
வாழ்கிறது !
மண்ணகத்தின் பொன்சிரிப்பே மாசில்லா
வானமுதே !
எண்ணத்தின் எழில்நதியே ஏற்றத்தின்
தேனமுதே !

விண்ணகத்தின் விழியொளியே விரிந்தெழுந்தாய்
பேரழகே !
தண்ணீரே ! தண்ணீரே ! தாய் நீயாய்
ஆனீரே !


ரே.எழில்சியா

 

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *