பிராண்டிக்ஸ் வெலிசரவின் பொது முகாமையாளர் மலிந்த சேனாதீர இம்முறை வியமன் TV யில் “ஹன்துனாகத்தொத் ஒப மா” (நீங்கள் என்னை அறிந்தால்) நிகழ்ச்சியில் இணைந்துகொண்டார்.
கலைக் குடும்பத்தில் பிறந்த இவர் ஒரு கலைப் பிரியர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் “நான் யார் என்று இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று கூறியபடி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அவரது தந்தை இறந்துவிட்டார், சேனாதீரவின் தந்தை சேனாதீரவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பவேண்டும் என்று நம்பி இருந்தார். தந்தையின் மறைவுடன், அவர் நிலைகுலைந்து A/L பரீட்சையை எதிர்கொண்டார், ஆனால் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற முடியவில்லை. தன்னால் பல்கலைக்கழகம் செல்ல முடியாவிட்டாலும், தன்னுடன் இருந்த நண்பர்கள் பல்கலைக்கழக கல்வியை கற்கும் வாய்ப்பைப் பெற்றதாக திரு.சேனாதீர தெரிவித்தார்.
பின்னர் ஒரு நிறுவனத்தில் பயிற்சி பெரும் மேலாண்மை அதிகாரியாகச் சேர்ந்த அவர், அங்கு சுமார் ஒரு வருடம் பணியாற்றியபோது, உயர்கல்வி பயில அவருக்குப் புதிய பாதை திறக்கப்பட்டது. A/Lக்குப் பிறகு பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உற்பத்திப் பட்டப்படிப்பைத் தொடர முடிந்தது. தனது கல்வியை மேற்கொண்டு, வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார்.
வாழ்க்கையில் முன்னேற அதிர்ஷ்டம், நோக்கம், நம்பிக்கை ஆகிய மூன்றும் தேவை என்று அவர் மேலும் கூறினார். “அதிர்ஷ்டவசமாக நான் இந்தத் துறைக்கு வந்தேன். நான் வணிகவியல் படித்தேன். அப்போது நான் வேறு வழியில் சென்றிருக்கலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு ஆடைத் துறை கிடைத்தது. என்னால் செய்ய முடியாததைச் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை இருந்தது. நான் எனது இலக்கை வேகமாக அடைந்தேன், ”என்று அவர் கூறினார்.
அறிவியல் புனைகதைகளை ரசித்து படிக்கும் சேனாதீர அவர்கள், புதிய விஷயங்களுடன் மாறிவரும் உலகத்தை தான் விரும்புவதாக கூறினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் நிலைமையுடன், ஆடைத் தொழில் பெரும் பெறுமதியைப் பெற்றுள்ளதுடன், ஆடைத் தொழிலைச் சேர்ந்தவர்கள் அத்தியாவசிய சேவைகள் பிரிவின் கீழ் பணியாற்ற வேண்டியிருந்தது. “எல்லோரும் வீட்டில் இருக்கும் போது நாங்கள் வேலை செய்கிறோம் என்பதன் மூலம் இந்த நாடு எங்களின் வியர்வை, உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் இயங்குகிறது என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர்,” என்று சேனாதீர ஆடைத் துறையின் பெறுமையைப் பற்றி கூறினார்.
தொற்றுநோய் பரவியுள்ள நிலையில், பிராண்டிக்ஸ் போன்ற நிறுவனத்தில் பணியாற்றுவது மதிப்புக்குரியது என்பதை அனைவரும் புரிந்துகொண்டதாகவும், பிராண்டிக்ஸ் பணியாளர்களுடன் இணைந்திருப்பது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் வாழ்க்கையை வெற்றியடையச் செய்வதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்று நிகழ்ச்சியின் இறுதியில் திரு.சேனாதீர கூறினார்.