இயற்க்கை அன்னை தந்த வரமாம்
இன்பமாகத்திகளும் தெவிட்டாத தண்ணீராம்
தண்ணீர்தாம் பூமிக்கு தாயாம் ! நம்மைத்
தாய் அன்பால் காப்பதுபோல் தண்ணீர்த் தாயைக்
கண்போல பேணிக் காக்கா விட்டால்
கண்ணீரில் நனைந்து நாம் துடிக்க வேண்டும்
மண்மீதில் சிறு புல்லும் முளைப்பதற்கு
மழை ஈயும் தண்ணீரே உயிராம் ! அந்தத்
தண்ணீரைச் சேமித்து காக்காவிட்டால் …
தார்பாலை குமிந்தத் தாரும் வாழ்வும் !
முன்னோர்கள் ஊர்ச்சுற்றி அகழி வெட்டி..
முழு நீரைத் தேக்கிவைக்க இலஞ்சி கூவல்
நன்னீராய் சிறைகுளமாம் கிணறு தன்னில்
நாற்புறமும் கரையழைத்தே ஏரி தன்னில்
நன்றாக மழைநீரைத் தேக்கி வைத்து
நல்லபடி நிலத்தடியில் காத்ததாலே
பொன்போல் முப்போகம் வயல் விளைத்துப்
பொறுத்திருந்தார் தாகம் இன்றி நிறைந்த வாழ்வாய்!
நீர்தேங்கும் ஏறி குளம் குட்டையெல்லாம்
நிரவியதை மனைகளாக்கி விற்றுவிட்டோம்
நீர்பாய்ந்த ஆற்றினிலே கழிவு நீரை
நிரப்பியதை சாக்கடையாய் மாற்றிவிட்டோம்
ஊர் நடுவே ஆழ்த்துளையில் கிணறு தோண்டி
உறிஞ்சி எல்லா நீரையும் காலிசெய்தோம்
சீர்பெறவே காடுமலை காத்து வானம்
சிந்துகின்ற தண்ணீரை காப்போம் .. வாழ்வோம்