குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலம். நமது எதிர்காலம் அழகாக இருக்க, நம் குழந்தைகள் திறமைகளில் சிறந்தவர்களாகவும் மற்றும் கல்வி கற்பதில் முன்னேற்றமுள்ள குழந்தைகளின் தலைமுறையாக இருப்பது அவசியம். இன்றைய உலகம் நாம் சிறு வயதில் பார்த்ததிலிருந்து மிகவும் வித்தியாசமானது. உலகம் தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. இந்த தொழில்நுட்பத்தோடு நாம் முன்நோக்கி செல்லாவிட்டால், நாட்டின் எதிர்காலத்தை கையில் எடுக்கக் காத்திருக்கும் குழந்தைகள் இந்த உலகத்தின் பார்வையில் தங்கள் இடத்தை இழக்க நேரிடும்.
இன்றைய சவால் மிக்க உலகத்தில் நாம் முன்னேறிச் செல்ல ஆங்கில மொழி அறிவு மிக முக்கியமான ஒன்றாகும். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் நீங்கள் மிகச் சிறிய குழந்தைகள் தங்கள் வாழ்க்கையினை வென்றிருப்பதனை பார்த்திருப்பீர்கள். அவர்களைப் பார்க்கும்போது, உங்கள் பிள்ளைகள் இப்படி ஒரு இடத்திற்கு வருவார்களா என்று நீங்கள் நிச்சயம் நினைத்திருப்பீர்கள். இதற்க்கு ஆங்கில மொழி சரியாகத் தெரியாமல் இருப்பதுதான் பிரச்சனை என்றால் அதற்கு சிறந்த தீர்வு Right to Read செயல்த்திட்டம் ஆகும்.
உங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் படிக்க அனுப்பவோ புத்தகம் வாங்கிக் கொடுக்கவோ உங்களிடம் பணம் இல்லை என்று நினைத்து கவலைப்பட வேண்டாம். Right to read செயல்த்திட்டம் ஊடாக, குழந்தைகள் ஒரு App மூலம் வீட்டில் இருந்தவாறே ஆங்கிலம் கற்கும் வாய்ப்பு உள்ளது. இதற்க்கு உங்களுக்கு தேவை ஒரு ஸ்மார்ட்போன் மாத்திரமே. இதன் மூலம் 3ம் ஆண்டு முதல் 8ம் ஆண்டு வரையிலான குழந்தைகள் ஆங்கிலத்தை மிக எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.
Right to read செயலத்திட்டத்தின் சிறப்பு என்னவெனில், பிராண்டிக்ஸ் நிறுவனமும் உலகெங்கிலும் உள்ள பிற நன்கொடையாளர்களுடன் இணைந்து கல்வி அமைச்சகத்துடன் கூட்டு சேர்ந்து இந்த திட்டத்தை ஆரம்பித்திருப்பதாகும் . நாட்டின் வருங்கால சந்ததியினருக்கு சிறந்த ஆங்கிலக் கல்வியை வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் Right to read செயல்த்திட்டம், போட்டி நிறைந்த உலகில் உங்கள் குழந்தைகளை சிறந்தவர்களாக விளங்கச் செய்யும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.