நீரே வாழ்வின் ஆதாரம்

நீர் இன்றி அமையாது மனித வாழ்வு

நிலத்தின் அடியில் ஊற்றெடுக்கும்

நீரே 

மனதை வெளிச்சம் போட்டு காட்டும்

கண்ணீரே

தேங்கி கிடக்கும் நீர் குட்டையாய் மனது

கல்லெறிந்தால் கலங்கிவிடும்

கலங்குவதில்லை ஓடும் நதி நீர்

கங்கை நீர் புனிதந்தான் அதனால்

கிணற்று நீர் வீண் என்று இல்லை

ஆற்று நீர் வளைந்து ஒதுங்கி

ஓடு தடைகள் உடைத்து வெற்றி இலக்கை பிடித்து விடலாம்

நீரின் பயனுணர்ந்து நீரை பாதுகாத்திடுவோம்

நீரின் குணமறிந்து வாழ்வை புதுப்பிப்போம்

நீரே வாழ்வின் ஆதாரம்!

Facebook