நீயும் கூட என்னைப் போலத்தான், நின்றால் குற்றம்,
நடந்தால் குற்றம், அமர்ந்தால் குற்றம், நீ என்ன
செய்தாலும் குற்றமென்றால் எங்கே தான் போவாயோ?
போவது தான் போகிறாய் இரு வருகின்றேன்
என்னையும் உடனிலுத்துச் செல் !
பெண் கண்ணீர் வேறு ஆற்றுத் தண்ணீர்
வேறு அல்ல
மடை திறந்தால் இரண்டும் ஒன்றே !
உனக்காகத்தான் தன் நாட்டில்
சண்டையென்று இருமார்பு கொண்டாயோ !
நானும் இருக்கிறேன் போட்டிக்கு
குடம் தண்ணீர் 5ரூபய் என்ற
காலம் மலையேறி லாறித் தண்ணீர்
2500ரூபாய் வாங்கி நிரப்புவதில்
நிற்கிறது கொழும்பு வாழ்க்கை !
இங்கே பெண்ணுக்கும் தண்ணீருக்கும்
தான் விலையே ! – அடச்சே
நடந்தாய் வாழி காவேரி! அல்ல ! அல்ல!
வறண்டன வற்றாத ஜீவா நதிகள் !
குறைந்தன நாட்டில் பெண் குழந்தைகள்
பிறப்பு விகிதம் !
அன்பு மழையாக அன்னை மழையாக
பூமி தோடு !
வற்றாத பெரு வெள்ளத் தண்ணீரில்
பெண் கண்ணீர் கரைந்துருகிக்
காணாமல் ஆகட்டும் !
அதற்கேனும் நீ இறங்கி வா !
நி. நிலுக்சனா