இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எமது பிராண்டிக்ஸ், 7வது தடவையாக ‘ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர்’ என தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் இது அறிவிக்கப்பட்டது. நவம்பர் 26 அன்று நடந்த விருது வழங்கும் விழாவில் 2019/20 ‘ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர்’ விருதைத் தவிர பல விருதுகள் கிடைக்கப்பெற்றமைக்கான காரணம் ஒரே குடும்பமாக இணைந்து செயலாற்றும் எங்கள் உறுப்பினர்களின் கடின உழைப்பே ஆகும்.
ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில், 2019/20 ஆம் ஆண்டிற்கான ‘ஏற்றுமதி விநியோகச் தொடருக்கான பிராந்திய பங்களிப்பு’ விருதையும், ‘வளர்ந்து வரும் சந்தைகளுக்கான சிறந்த ஏற்றுமதியாளர்’ மற்றும் ‘சிறந்த ஏற்றுமதியாளர் – ஆடை – பாரிய அளவிலான’ பிரிவுகளையும் பிராண்டிக்ஸ் வென்றது. 2020/21 ஆம் ஆண்டிற்கான ‘ஏற்றுமதி விநியோகச் தொடருக்கான பிராந்திய பங்களிப்பு’ பிரிவில் ஒட்டுமொத்த வெற்றியையும் எங்களால் அடைய முடிந்தது.
மரியாதை, நேர்மை, குழு மனப்பான்மை மற்றும் சிறந்து விளங்குத்தல் போன்ற கோட்பாடுகளுடன் ஒன்றாகச் செயல்படுவதால், உலகிற்கு ஈர்க்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதன் மூலம் இந்த சாதனைகள் அனைத்தையும் எங்களால் அடைய முடிந்தது. எமது உறுப்பினர்கள் R.I.T.E. மதிப்புகளால் வளர்க்கப்பட்ட விழித்தெழுந்தவர்கள் என்பதால், உலகின் மிகவும் பிரபலமான சில ஆடை நாமங்களுக்கு ஈர்க்கப்பட்ட தீர்வுகளை வழங்க முடிகின்றது.
2012 முதல் 2016 வரை, 2018/19 ஆண்டிற்கான, ‘ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர்’ என்ற ஜனாதிபதி விருதை பிராண்டிக்ஸ் வென்றுள்ளது. தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதிலும், இந்த வெற்றிப் பயணத்தின் பின்னணியிலும் நமது ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புதான் முக்கிய பங்கு வகிக்கிறது.
விழித்தெழுந்த மக்களுடன் விழிப்புணர்வூட்டும் தீர்வுகளை வழங்குவதன் மூலம் ஆடைத் துறையில் வெற்றிக்கான எங்கள் தேடலில் எங்களுக்கு பலமாக இருக்கும் உங்கள் அனைவருக்கும், “வியமன்” ஆகிய எமது மனமார்ந்த நன்றிகள்…