தண்ணீரில் நீந்துகிறது மீன்
கண்ணீரில் நீந்துகிறான் மீனவன்
நீரின்றி தவிக்குது விவசாயம்
கண்ணீரில் கலங்குவது விவசாயி உள்ளம்
குடி நீரின்றி அலையும் மக்கள்
தாக வறட்சியில் உள்ளம் – இது
நீர் இட்ட சாபமா – இல்லை
மக்கள் செய்த பாவமா?
நீரின் அருமை புரிகின்றதா
கண்ணீரின் வழியாக
விண்ணிலிருந்து வரும் நீரை
ஒரு போதும் குடை கொண்டு
தடுக்க மாட்டேன் என்
செல்லமே நீரே…
இ.நிரோஷா