ஐம்பூதங்களில் ஐக்கியமான நீரே!

ஐம்பூதங்களில் ஒன்றாகி அகிலமெங்கும்

ஐக்கியமானாய் ஆனந்த நீரே!

உலகம் வாழ உறுதுணையும் நீரே! – அது

அழிய அடித்தளமும் நீரே!

உலகைக்காண நான் வருகையில் – முதலில்

காண்பது நீரையே!

நீர் இல்லையேல், பயிர் இல்லையே!

பயிர் இல்லையேல், பசுமை இல்லையே!

வானம் நீரை மழையாகப் பொழிய – அதை

பூமி புனிதமாய் வரவேற்க!

நிலத்தில் நிலையாக நிற்கும்

நிறமில்லாத நீரே!

வளத்தில் வைரமாகி வலம்வரும் – என்

வரமான நீரே!

உன் கருணை கடலாகமாறி – பின்

நதியில் நர்த்தனமாட வேண்டுகிறோம்

“கண்ணீர் இல்லாமல் வாழலாம் தண்ணீர்

இல்லாமல் வாழ முடியாது சிந்தித்து செயலாற்றுங்கள்”

மே. மேகலா

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *