நானே உங்கள் தோழன்

உற்றுப் பெருக்காய் 

வெளி வருவேன் ….

ஆற்றின் மூலம்

உலகலப்பேன் ….

ஊர் உலகை

படைத்திடுவேன்….

படைத்த பின்னே

காத்திடுவேன் ….

சுத்தம் செய்ய

பயன் பாடுவேன்….

சுகாதார வாழ்வு

தந்திடுவேன் ….

அக்கம் அழிவு

செய்திடுவேன் ….

அண்டம் முழுதும்

பரந்திடுவேன் ….

மின்னாற்றலுக்கு

வழி வகுப்பேன் …

மீன்கள் வாழ

வழி செய்வேன் …

பனிக்கட்டியாய்

மாறிடுவேன் …

பானம் பல

குளிர்விப்பேன்….

பலமாய் மழையாய்

பெய்திடுவேன் ….

பயிர்கள் செழிக்க

உதவிடுவேன் ….

த. மாணிக்கரெத்தினம்

Facebook