இயற்க்கை தாய் பெற்றுத்தந்த அரும் கொடை நீ
நீ இங்கு நீராய் இல்லையேல்!
நாம் இங்கு உயிராய் இல்லை
ஆறாய் ஓடி கடல் சேர்ந்து
ஆகாயம் சென்று வர, உன் வருகை எதிர்பார்த்து
பச்சிளங் பயிர்கள், ஊர் உலகம்
உனை எண்ணித் தவிக்கையில்
ஒரு சிலர் வதைப்பது ஏனோ! உன் அருமை தெரியாது
சாதி மதம் பாராது, சர்வ நிலம் பாயும் உனை, எண்ணி
சங்கடம் ஏதுமின்றி தலைக்கனம் கொள்வேன்
நீயே ஒருவன் என்று!
க. கெளசிகன்