உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று கொண்டாடப்படுகிறது. உலக வானொலி தினம் பிப்ரவரி 13 அன்று வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதாவது 1946 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் வானொலி சேவையைத் தொடங்கியது. தகவல் தொடர்புக்கு பயன்படும் வானொலி நம் அனைவருக்கும் நெருக்கமான ஒரு ஊடகம் ஆகும். தொலைக்காட்சித் திரை மக்களைக் கவர்ந்து, அவர்களின் வீட்டு அறைகளை ஆக்கிரமிப்பதற்கு முன்பே, நம் முன்னோர்களுக்கு வானொலியுடன் அற்புதமான ஒரு தொடர்பு இருந்தது. தொலைக்காட்சியின் படையெடுப்பால், வானொலி மக்களிடமிருந்து அந்நியப்பட்டது, ஆனால் பின்னர் வானொலி நிலையங்கள், அவற்றின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் வழங்குநர்கள் வானொலியை பார்வையாளர்களுக்கு நெருக்கமாக கொண்டு வர முடிந்தது. காலப்போக்கில், பல்வேறு வகையான தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக வானொலியைப் பயன்படுத்தி பரந்த அளவிலான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கல்வி நிகழ்ச்சிகள், செய்தி மற்றும் தொடர்பாடல் நிகழ்ச்சிகள், சமய நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் தற்போது வானொலி சேவைகளில் ஒலிபரப்பப்படுகின்றன.
எப்போதும் விழித்தெழுந்த தீர்வுகளை உலகிற்கு வழங்குவதற்கு அர்ப்பணித்துள்ள பிராண்டிக்ஸ், அதன் உறுப்பினர்களை சென்றடையவும் அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கவும் வானொலியை வேறு பரிமாணத்தில் பயன்படுத்தும் உத்தியை கையாண்டுள்ளது. தன் உறுப்பினர்களுக்கு வித்தியாசமான புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை வழங்கும் நிறுவனம் என்றவகையில் 2010 இல் புத்தம் புதிய அனுபவத்தை பெற்றுத்தருவதற்கு பிராண்டிக்ஸ் வானொலியினை வழங்கி வைத்தது. மற்ற சேனல்களில் இருந்து மாறுபட்ட தரமான சேவையை வழங்கி, பிராண்டிக்ஸ் வானொலி தனது உறுப்பினர்களின் அறிவு மேம்பாட்டு நிகழ்ச்சிகள், ஆளுமை மேம்பாட்டு நிகழ்ச்சிகள், மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நிறுவன செய்திகள், விஷேட செய்திகள் (பிரேக்கிங் நியூஸ்) போன்றவற்றை அவர்களின் செவிகளுக்கு கொண்டு செல்வதற்காக தொடர்ந்து உருவாக்கி வருகிறது. பிராண்டிக்ஸ் வானொலியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று பிராண்டிக்ஸ் நிறுவனங்களில் திறமையான உறுப்பினர்களுக்கு அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும். பிராண்டிக்ஸ் வானொலி ரசனைகளின் வரம்பை விரிவுபடுத்துகிறது மற்றும் அதன் உன்னதமான இசையால் கேட்போரை மகிழ்விக்கிறது, அதே வேளையில் உயர் மட்ட இன்பத்துடன் கூடிய இளைஞர்களின் தலைமுறையை உருவாக்கும் உன்னதப் பணியைத் தாங்கி நிற்கிறது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பயணத்தில் பிராண்டிக்ஸ் வானொலியுடன் இணைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பல புதிய அனுபவங்களுடன் உங்களை எதிர்காலத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். முன்னெப்போதையும் விட அதிக அறிவைக் கொடுத்து, புதிய தரமான வடிவத்துடன் உங்களை உங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதே எங்கள் நோக்கம். உங்கள் நெருங்கிய வானொலி நண்பரான பிராண்டிக்ஸ் வானொலியுடன் இணைந்திருக்க உங்களை அன்போடு அழைக்கிறோம் ….