வியமன் டிவி நிகழ்ச்சியான ‘பிபிதுனு அபி’ / “விழித்தெழுந்த நாம்” மூலம் விழித்தெழுந்த வாழ்க்கை கதைகளை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். இம் முறை நிகழ்ச்சியில் இணைந்தது, எதிர்காலத்தில் ஒளிரும் நட்சத்திரமாக மாற எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம். அவர் பிராண்டிக்ஸ் வத்துப்பிட்டிவல நிறுவனத்தை சேர்ந்த நதீஜ ரங்கன ஆவார்.
சிறுவயதில் இருந்தே இசையில் சிறந்து விளங்கும் நதீஜ, தனது வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை குறித்தும், எதிர்கால நம்பிக்கை குறித்தும் வியமன் தொலைக்காட்ச்சிக்கு இவ்வாறு தெரிவித்தார்.
“நான் முதன்முதலில் இலங்கையில் உள்ள பிரபலமான இசைக்குழுவில் வழக்கமான முன்னணி பாடகராகப் பாட ஆரம்பித்தேன். என் வாழ்வின் திருப்புமுனையாக இசை பயணம் இசைக்குழுவிலிருந்தே ஆரம்பமாகியது. நான் பாடசாலையின் மேற்கத்திய இசைக்குழுவின் தலைவராக இருந்தேன். 2014 இல் சிறந்த தலைவருக்கான மேல் மாகாண கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. எனக்கு இசைக்குழுவில் எந்தவொரு இசைக்கருவியையும் வாசிக்கும் திறமை இருந்தது. இந்த விஷயங்களைக் கொண்டுதான் பாடசாலை இசைக்குழுவை வழிநடத்த எனக்கு கிடைத்தது.
அப்போது பாடகன் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கவில்லை. பாடசாலையில் பாட்டுப் போட்டிகள் அறிமுகம் ஆனதால், பாடகனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றியது.
இசைக்குழுவில் இணைவதற்கு முன், 2015ஆம் ஆண்டு அளவில் ஒரு மறக்க முடியாத சம்பவம் நிகழ்ந்தது . மேலதிக வகுப்பிற்கு கொடுக்க அம்மா பணம் கொடுத்தார், நீண்ட நாட்களாக கிடார் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த பணத்தில் கிடார் வாங்கினேன். அன்றைய தினம் வீட்டிற்கு வந்தபோது நிறைய குறைகளை கேட்டேன். அதிலிருந்து நான் சொந்தமாக கிட்டார் வாசிக்க கற்றுக்கொண்டேன். சில பொருளாதார பிரச்சனை காரணமாக 2021 இல் கிடாரிணை விற்க வேண்டியிருந்தது. அன்று நான் மிகவும் அழுதேன். ஏனென்றால் நான் கிட்டாரை மிகவும் நேசித்தேன்.
பிறகு பிராண்டிக்ஸ் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக சேர்ந்தேன். பிராண்டிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தபோது, தொழில் தான் எனது வாழ்க்கை என்று நினைத்தேன், இசைத்துறையில் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை இருக்கவில்லை. என்னால் பாட முடியும் என்று இங்கு யாருக்கும் தெரியாது. நான் பாட்டு பாடி ஃபேஸ்புக்கில் பதிவிட்டதைப் பார்த்ததும்தான் நண்பர்கள் என்னை மீண்டும் பாட வைத்தார்கள்.
இதற்கிடையில், எனது நண்பர்கள் சிலர் என்னை ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு செல்ல வழிநடத்தினார்கள். அன்றைய தினம் லீவு பெற்றுத்தந்தது, காசும் கொடுத்து, எனது வேலையினை அவர்கள் செய்து தருகிறேன் என்று சொல்லி போட்டிக்கு அனுப்பினார்கள் என் நண்பர்கள். அடிப்படை தேர்வுகள் இருந்த போட்டியின் கடைசி நாளில் தான் நான் சென்றேன்.
நான் போட்டிக்கு போவது கூட நிறுவனத்திற்கு தெரியாது. போட்டியில் பங்கேற்ற பிறகு, மனிதவளத் துறை எனக்கு வார்த்தைகளில் சொல்ல முடியாத வகையில் உதவுகிறது. எங்கள் உயர் நிர்வாகமும் அற்புதமான உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது. என்னால் ஒரு நட்சத்திரமாக உருவாக முடியாமல் போகலாம், ஆனால் இந்த அறிவுரை வாழ்க்கையில் வேறு எதற்கும் பொருந்தும்.
நான் ஒரு இடிந்துவிழாத நட்சத்திரமாக விரும்புகிறேன்”
வியமன் நதீஜவின் நம்பிக்கைகள் அனைத்தும் நிறைவேறி, போட்டியிலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.