மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் உள்ள மரப்பலம் கிராமத்தில் பல துன்பங்களுக்கு மத்தியில் வசித்து வருபவர் சுதர்ஷினி. இத்தகைய இன்னல்களுக்கு மத்தியில் உயிர்வாழும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளித்த பிராண்டிக்ஸின் சமூகப் பணி குறித்து BBC ஸ்டோரிவோர்க்ஸ் கொமர்சியல் புரொடக்ஷன் உருவாக்கிய காணொளியில் இருந்து இந்தக் கதையை உங்களுக்குத் வழங்குகிறோம்.
மாரப்பலம் கிராமத்தில் குடிநீருக்கு கூட சிரமப்பட்டு வசித்து வந்த சுதர்ஷினி, காலையிலும் தமது குழந்தைளுடன் தண்ணீர் பெறச்சென்று, மாலையில் மீண்டும் தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இக்கட்டான வாழ்க்கையிலிருந்து தன் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில் அவள் நீண்ட தூரம் நடந்து தண்ணீர் எடுத்து வந்து வேலைக்குச் செல்வாள்.
ஆனால் அவளால் பிராண்டிக்ஸின் நிழலில் சேர்ந்ததன் மூலம் இந்த கடினமான வாழ்க்கையை அழகாக்க முடிந்தது. ஏனென்றால், மக்களை விழித்தெழச் செய்வதில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் பிராண்டிக்ஸ், அவளது ககுடும்பத்தினருக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்க்காக ஒரு கிணற்றைக் அமைத்துக்கொடுத்தது தண்ணீர் எடுக்க மணிக்கணக்கில் நடந்து சென்று கொண்டிருந்த நேரமும் சிரமமும் இப்போது இல்லை.
சுதர்ஷினியின் வீட்டிற்கு தண்ணீர் பெற்றுக்கொடுத்து நிறுத்திவிடாமல், மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ள பலருக்கும் பிராண்டிக்ஸ் குடிநீரை வழங்கியது. பாதுகாப்பான குடிநீரைப் பெறுவது நிறுவனத்தின் பணியாளர்கள் பலருக்கு சவாலாக இருப்பதை உணர்ந்த பிராண்டிக்ஸ், 4,500க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் “Care For Our Own” திட்டத்தையும், இப்போது சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரத்தை வழங்கும் மாதிரி கிராமத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் 300 பேருக்கும் அதிகமானவர்களுக்கு சுத்தமான குடிநீரும், மலசல கழிவு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சுதர்ஷினியின் மகள்கள் படிக்கும் பள்ளிக்கு பிராண்டிக்ஸ் தண்ணீர் வசதி செய்து கொடுத்தது. இந்த குடிநீர் திட்டத்தால் 700க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்.
நிலையான வளர்ச்சிக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் பிராண்டிக்ஸ், பூமியினதும் மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றும் என நம்புகிறது.