"லோகோ என்பது ஒரு எளிய விஷயம் அல்ல"

பிராண்டிக்ஸ் நிறுவனம் ஐம்பது ஆண்டு கால பயணத்தின் போது விழித்தெழுந்த மக்களுடன் விழித்தெழுந்த தீர்வுகளை உலகிற்குக் முன்வைத்து வரும் ஒரு நிறுவனமாகும். பிராண்டிக்ஸின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடத்தப்பட்ட லோகோ வடிவமைப்பு போட்டியில் முதலிடத்தைப் பெற்ற. பிராண்டிக்ஸ் குழும தொடர்பாடல் மேலாண்மை அதிகாரி கெவின் பெரேரா, இம்முறை வியமன் TV இன் “விழித்தெழுந்த நாம்” நிகழ்ச்சியின் மூலம் உங்களை சந்திக்கின்றார்.

“நான் தான் பிராண்டிக்ஸ் ஐம்பதாவது ஆண்டு லோகோவை வடிவமைத்தேன். கணினி விளையாட்டுகளின் மூலம் தான் எனக்கு கிராஃபிக் வடிவமைப்பில் ஆர்வம் ஏற்பட்டது. எனக்கு கணினி விளையாட்டுகள் மிகவும் பிடிக்கும். நான் எனது சொந்த கணினி விளையாட்டை உருவாக்க விரும்பினேன், அதனால் பல்வேறு மென்பொருள்களைப் (Software) பற்றி அறிந்துகொண்டேன். அதே நேரத்தில், நான் கிராஃபிக் டிசைனில் ஒரு தொழிலைத் தொடர ஆரம்பித்தேன்.

அப்படித்தான் கிராஃபிக் டிசைனிங்கில் எப்படி இணைந்தார் என்பது பற்றி வியமன் டிவியுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். சிறந்த ஒரு படைப்பாற்றல் கொண்ட அவர், பிராண்டிக்ஸின் ஐம்பதாவது ஆண்டு விழாவிற்காக இலட்சினையினை  உருவாக்கினார், இது பிராண்டிக்ஸ் விழித்தெழுந்த   பயணத்தின் கதையை அற்புதமாக சித்தரித்தது.

“லோகோ என்பது ஒரு எளிய விஷயம் அல்ல என்று நான் நம்புகிறேன். ஒரு லோகோவிற்கு அதன் தனித்துவமான அடையாளம் உள்ளது. அதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. லோகோ மூலம் பிராண்டிக்ஸ் டி.என்.ஏ. மற்றும் பிராண்டிக்ஸின் கதையைச் சொல்ல விரும்பினேன். மேலும்  பிராண்டிக்ஸின் ஐம்பதாவது ஆண்டு நிறைவின் லோகோவை எடுத்துக் கொண்டால், கடந்த ஐம்பது ஆண்டுகளாக பிராண்டிக்ஸ் செய்துள்ள பணியை அது பிரதிபலிக்கிறது. லோகோவில் உள்ள ஐந்து எண்பச்சை நிறத்தில் இலையுடன் இருக்கும். இது பிராண்டிக்ஸின் நிலைத்தன்மை மற்றும் பசுமையான நிலைத்தன்மையை பிரதிபலிக்கிறது. பூச்சியத்தின் மூலம் நீல நிற நீர் துளியும் அதில் உள்ளது. இது நமது சமூக மற்றும் மனிதாபிமான பணியை பிரதிபலிக்கிறது.

எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் என்னால் லோகோவை உருவாக்க முடியாது. பிராண்டிக்ஸ் ஐம்பது ஆண்டு விழா லோகோவை உருவாக்க எனக்கு உதவிய அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிராண்டிக்ஸ் விழித்தெழுந்த பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *