ஒரு உயிருக்கு உயிர் கொடுப்பது மிகவும் உன்னதமான செயல் ஆகும். பிராண்டிக்ஸின் எம்துத்டுவத்தோடு இணைந்த மனிதநேயத்தால் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு உயிர் கொடுக்க எம்மால் முடிந்தது. இதன் விளைவாக, பிராண்டிக்ஸ் குழுமத்தினரால் தொடர்ந்து 10 ஆண்டுகளாக தனியார் துறையின் மிகப்பெரிய இரத்த தானம் வழங்குநராக திகழ முடிந்துள்ளது. பிராண்டிக்ஸ் எம்துத்துவத்தின் பெருமையை அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில், இரத்தம் தேவைப்படும் மக்களுக்கு உயிர் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் மனிதாபிமான பணியை தேசிய இரத்தமாற்ற மையம் பாராட்டியுள்ளது.
தொடர்ந்து 13 வருடங்களாக, பிராண்டிக்ஸ் குழுமத்தால் 36,000 யூனிட்களுக்கும் அதிகமான இரத்தத்தை தேசிய இரத்த மாற்று மையத்திற்கு பிராண்டிக்ஸின் விழித்தெழு உறுப்பினர்களின் உதவியுடன் தானமாக வழங்க முடிந்தது. 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நாட்டில் இரத்த தானம் செய்பவர்களில் 100 பேரில் ஒருவர் பெருமைமிக்க பிராண்டிக்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஒரு உயிரைப் பாதுகாப்பது உண்மையிலேயே ஒரு விலைமதிப்பற்ற சேவையாகும்.
பிராண்டிக்ஸ் குழுமத்தின், பிராண்டிக்ஸ் பொலொன்னறுவை மற்றும் பிராண்டிக்ஸ் மட்டக்களப்பு ஆகியவை அதிக எண்ணிக்கையிலான இரத்த அலகுகளை வழங்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களாகும். தேசப்பற்றுள்ள மக்களாகிய நாம், இதனை எமது கடமையாக எண்ணி, ஒழுக்க விழுமியங்களால் வளர்க்கப்படும் விழித்தெழுந்த மக்களுடன், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த இரத்த தான தேசியப் பணியைத் மேலும் தொடரும் என பிராண்டிக்ஸ் நம்புகிறது.