ஆடைத் துறையில் முழு உலகிற்கும் விழித்தெழுந்த தீர்வுகளை வழங்கும் பிராண்டிக்ஸ் குழுமம் அத்தியாவசியமான அனைத்து நேரங்களிலும் நாட்டிற்க்கு உறுதுணையாக இருக்க துணிச்சலுடன் முன்வரும் ஒரு நிறுவனமாகும். அதனால்தான் இன் நேரத்தில் நம் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள நம் நாட்டு மக்களுக்கு உதவ பிராண்டிக்ஸ் முடிவு செய்தது. இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவு மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிராண்டிக்ஸ் அண்மையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தில் (UNDP) இணைந்து கொண்டது.
இத்தருணத்தில் நாங்கள் எங்களின் சொந்த மக்களுக்கு ஒரு தனியார் துறையாக எங்களால் இயன்றதைச் செய்ய முயன்று வருகிறோம். இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) இலங்கையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் உணவு நெருக்கடி குறித்து கவனம் செலுத்துகிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கான பின்னணியை உருவாக்க பிராண்டிக்ஸ் எம்மை போலவே பிற தனியார் நிறுவனங்களும் முன்வருவதற்கான காரணம், எமது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தனியார் துறையின் கடமை என்ற கருதுணதனால் ஆகும் அதனால்தான், மனிதாபிமான திட்டங்கள் மூலம் எங்களால் இயன்ற அளவு உயர்த்த செயல்படுகின்றோம்.
ஒரு நிறுவனமாக, ஆடைத் துறையில் நாம் சாதித்ததைப் போல, ஒரு நாடு என்ற வகையில், இந்த தருணத்தில் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் உணர்கிறோம். விழித்தெழுந்த மக்களுடன் ஒரு அறிவொளி நிறைந்த பரிமாணத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம் ஆகும். இதற்காக பிராண்டிக்ஸ் நாம் இன்று போல் நாளையும் தொடர்ந்து பணியாற்றுவோம்.