இன்று நாம் தொழில்நுட்ப உலகில் வாழ்கின்றோம். கைபேசியும், கணினியும் இன்று பிள்ளைகளுக்கு இன்றியமையாத கருவிகளாகிவிட்டன. இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதில் நன்மை தீமைகள் உள்ளன. இதிலிருந்து எமது பிள்ளைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து இம்முறை வியமன் தொலைக்காட்சியின் ‘விழித்தெழுந்த வாழ்வு’/ “பிபிதுனு திவியக்” நிகழ்ச்சியில் பிராண்டிக்ஸ் ரம்புக்கன உளவியல் ஆலோசகர் திருமதி. ரோஷனி பண்டார பேசுகிறார்.
“அவ்வப்போது நம் வாழ்வில் புதுப்புது விஷயங்கள் சேரும். கைபேசியும் இப்படி வந்த ஒன்றுதான். பெரியவர்களாகிய எங்கள் மத்தியில் மட்டுமல்ல, பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் வீட்டில் இருந்தால் அவர்கள் கைகளிலும் இப்போதைக்கு கைபேசி வந்து சேர்ந்து இருக்கிறது. இந் நாட்களில் அதிகமாக கேட்கும் ஒன்றுதான் “என் மகள், என் மகன் தொலைபேசியை நன்றாக பயன் படுத்துகிறார். போன்ல எல்லா வேலையும் தெரிஞ்சவன்தான்.. “சில சமயம் அம்மாவோ, அப்பாவோ இதைப் பெருமையாகச் சொல்வார்கள்.
உங்கள் மகனுக்கு, மகளுக்கு செல்போன் கொடுத்தால் அது தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், பிள்ளைகள் என்ன பார்க்கிறார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், தற்காலத்தில் மொபைல் போன் நம் வாழ்க்கைக்கு நல்ல விஷயமாகவும், சில சமயம் பிரச்சனையாகவும் மாறிவிட்டது. ஒரு பரபரப்பான அல்லது பிஸியான வாழ்க்கையை அனுபவிக்கும் நீங்கள், உங்கள் பிள்ளையை கண்காணிக்க சிறிது நேரம் செலவிடுங்கள். அதே நேரத்தில், கணினி மற்றும் மடிக்கணினிகள் கல்வியுடன் பின்னிப் பிணைந்துள்ளன. எனவே இதற்கு தகுந்த பாதுகாப்பான சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும், உங்கள் பார்வைக்கு எட்டிய அளவில், நீங்கள் அடிக்கடி சென்று வரும் இடத்தில் மடிக்கணினியை, தொலைபேசியை வைத்து கொடுங்கள், அப்போது நீங்கள் சமைக்கும் பொழுது கூட இடை இடையில் வந்து கண்காணிக்கலாம். நீங்கள் எவ்வளவு தியாகம் செய்தாலும், உங்கள் குழந்தைகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். எனவே உங்கள் பிள்ளையின் சிறந்த நண்பனாக, நன்பியாக நீங்களே இருங்கள்.”