எமது வாழ்க்கைப் பயணத்தில் வெவ்வேறு தருணங்கள் அமைகின்றன, நம் வாழ்க்கையை வேறு திசையில் மாற்றிக்கொள்ள. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னம்பிக்கையுடன் முடிவெடுத்து மாற்றத்தை ஏற்படுத்தினால் எமது வாழ்க்கையில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள எம்மாலும் முடியும். அந்த வகையில் தனது வாழ்க்கையை மாற்றி வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்ட ஒரு கதாபாத்திரம் வியமன் தொலைக்காட்சியில் ‘ஹந்துநாகத்தோத் ஒபா மா’ / “நீங்கள் என்னை அறிந்துக்கொண்டாள்”நிகழ்ச்சியில் இணைந்தார். அவர் பிராண்டிக்ஸ் நிவிதிகல வின் மனிதவள முகாமையாளர் திரு.பிரியங்க வீரசிங்க ஆவார்.
“2010 இல், நான் ஒரு விளையாட்டு வீரராக தொடர்வேனா அல்லது வேறொரு தொழிலில் தொடர்வேனா என்பதை முடிவு செய்ய வேண்டியிருந்தது. அந்த நேரத்தில், நான் தொழில் ரீதியாக முன்னேறுவேன் என்று முடிவு செய்தேன். எம்பிலிப்பிட்டிய மகா வித்தியாலயத்தில் அடிப்படைக் கல்வியைப் பெற்று, உயர் கல்விக்காக, நான் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் நுழைந்தேன்.
இன்று நான் தொழிலில் மனிதவள முகாமையாளராக இருக்கிறேன், ஆனால் நான் அப்போது திறமையான விளையாட்டு வீரனாக இருந்தேன். மறுபுறம், பாடசாலை மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் மற்றும் சர்வதேச மட்டத்திலும் நான் இலங்கைக்கும் எனது கிராமத்திற்கும் வெற்றிகளைக் கொண்டு வந்தேன். அதில், 2006ல் தாய்லாந்தின் பாங்காக்கில் நடந்த உலக பல்கலைகழக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றது எனது சாதனைகளை நினைக்கும் போது எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும் ஒன்றாகும்.
பிராண்டிக்ஸ் நிறுவனத்தில் மனித வள முகாமையாளராக இனைந்த பிறகு, சமுதாயத்திற்கும் இந்த நிறுவனத்திற்கும் செவ்வனே எனது பணியைத் தாண்டி ஒரு சேவை செய்ய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. எங்கள் நிறுவனத்தின் சகோதர சகோதரிகளின் தொழில்முறை திறன்கள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை மேம்படுத்துவதே எங்கள் ஒரே நோக்கமாக உள்ளது. ஒரு நிறுவனமாக அதைச் செய்ய முடிந்தால், விழித்தெழுந்த உறுப்பினர்களை உருவாக்கி, விழித்தெழுந்த சமுதாயத்தை உருவாக்க எம்மால் முடியும்.”