ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் திகதி அன்று உலக இளைஞர் திறன்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆற்றல்கள் நிறைந்த பிராண்டிக்ஸ் உறுப்பினர்களுக்கும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். ஏனெனில் பிராண்டிக்ஸ் குழுமம் அனைத்து துறைகளிலும் உள்ள திறமையான இளைஞர்கள் நிறைந்த ஒரு நிறுவனமாகும். புதிய உலகத்துடன் முன்னோக்கிச் செல்லும் உறுப்பினர்களால், பிராண்டிக்ஸின் பெயர் சர்வதேச ரீதியிலும் கெளரவிக்கப்பட்டுள்ளது.
பொற் கரங்களால் ஆடை நெய்யும் பிராண்டிக்ஸ் இளைஞர்கள், தையல் கலையில் அவர்களின் திறமையால் உலகின் தலைசிறந்த வர்த்தகநாமங்களுக்கு விழித்தெழுந்த தீர்வுகளை வழங்க முடிகிறது. தையல் என்பது ஒரு வகையான கலை. எல்லோருக்கும் அந்த திறமை இல்லை, அவர்கள் தங்கள் கைகளைப் பயன்படுத்தி முழு உலகத்தையும் வெல்வார்கள். பிராண்டிக்ஸின் இளைஞர்களிடம் இன்னும் பல திறமைகள் உள்ள உறுப்பினர்கள் உள்ளனர், Brandix Mercury Festival மூலம், திறமையான இளைஞர்களுக்கு அவர்களின் தொழில் திறனைத் தாண்டி அவர்களின் ஏனைய திறன்களுக்கு வாய்ப்பளிக்க ஒரு தளம் உருவாக்கப்பட்டது. ஆடல், பாடல், அறிவிப்பு போன்ற துறைகளில் பிராண்டிக்ஸிடம் திறமையான இளைஞர்கள் உள்ளார்கள் என்பதற்கு Mercury Festival சிறந்த உதாரணம் ஆகும். தொழிலுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், உறுப்பினர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வாய்ப்பையும் பிராண்டிக்ஸ் வழங்குவதோடு, பல்வேறு துறைகளிலும் முன்னேறவும் உதவுகிறது. அதனால்தான் தங்கள் அற்புதமான திறன்களைப் பயன்படுத்தி சுயதொழில் செய்யும் ஒரு குழு உருவாகியுள்ளது.
அதேபோன்று, பிராண்டிக்ஸின் இளைஞர்கள் புதிய சிந்தனைகளுடன், நிலையான அபிவிருத்திக்காக பிராண்டிக்ஸ் எடுத்த மாபெரும் நடவடிக்கைகளை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முடிந்தது. மேலும், மனிதவளத் துறைகள் தொழில்நுட்பத்துடன் முன்னேறி, உறுப்பினர்களுக்கு புதிய அனுபவங்களைக் கொண்டு வர முடிந்துள்ளது. தங்கள் திறமைகளை எதிர்காலத்திற்காக திறம்பட பயன்படுத்திக்கொள்ளும் பிராண்டிக்ஸ் இளைஞர்களுக்கு வெற்றிகரமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்!