மனிதநேயத்துடன் விழித்தெழும் பல்கலைக்கழகக் கனவு

பிள்ளைகள்தான்  நாட்டின் எதிர்காலம். நாளைய தினம் இளமைப் பருவத்திற்கு அடியெடுத்து வைக்கும் பிள்ளை, ஒரு பெரியவராக நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்ய, கல்வி, அறிவு, நற்பண்புகள் ஆகியவற்றில் சிறந்து விளங்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் பிராண்டிக்ஸ் குழுமம், நாட்டின் எதிர்காலத்தை அழகாக மாற்றுவதற்கு தன்னால் இயன்ற போதெல்லாம் செயல்படுகிறது. நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவிருக்கும் பிள்ளைகளின் உயர்கல்வி நடவடிக்கைகளை வலுப்படுத்தும் உன்னத நோக்கத்துடன் “மனுசத்கார” (மனிதநேய) பல்கலைக்கழக புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பமாகிறது.

“மனுசத்கார” பல்கலைக்கழக புலமைப்பரிசில் திட்டம் 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. பிராண்டிக்ஸ் மாதிரி கிராம திட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் சிறந்த திறன்களை வெளிப்படுத்தி உயர் கல்விக்கான வாய்ப்பை பெறும் பிள்ளைகளின் உயர் கல்விக்கு உதவுவதற்காகவே இத் திட்டம் செயல்ப்படுகிறது. முதற்கட்டமாக இலங்கையின் 8 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 18 சிறார்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டில் “மனுசத்கார” பல்கலைக்கழக புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவிருக்கும் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்க பிராண்டிக்ஸில் நாங்கள் தயாராக உள்ளோம். பல்கலைக்கழகக் கனவுகளைக் கொண்ட எமது நாட்டுப் பிள்ளைகள் தங்களுடைய உயர்கல்வி நடவடிக்கைகளைத் தடையின்றி தொடர ஊக்குவிப்பதே எமது அபிப்பிராயம் ஆகும்.