தங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேறுவது போன்றே, அவர்களின் தொழில் வாழ்க்கையில் திருப்தி அடையவும் அனைவராலும் இயலாது. எங்களுடைய தொழில்முறை சக ஊழியர்களில், ஆர்வத்துடன் வாழ்க்கையைத் தொடர்பவர்கள் குறைவாக இருந்தாலும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து தங்கள் தொழிலுக்கு மதிப்பு கொடுப்பவர்களும் எம்மத்தியில் உள்ளனர். இம்முறை வியமன் TVயின் ‘பிபிதுனு அபி’ / “விழித்தெழுந்த நாம்” நிகழ்ச்சியில் தனது தொழில் வாழ்க்கையை அவ்வளவு சுறுசுறுப்புடன் நடத்தும் கதாபாத்திரத்தினை கொண்ட ஒருவர் இணைந்தார். அவர் பிராண்டிக்ஸ் வத்துபிட்டிவல நிறுவனத்தின் ஒரு குழுத் தலைவராக கடமையாற்றும் நாமல் மெதகம ஆவார்.
“நான் நான்கு வருடங்களுக்கு முன்பு தான் வத்துபிட்டிவல நிறுவனத்தில் சேர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை, எனக்கு சில சிறப்புத் திறமைகள் இருந்தன. நான் குறிப்பாக ஒருவரை பார்த்து அவரது பாணியில் அவரை போன்றே என்னால் செய்ய முடியும். எமது நிறுவனத்தின் மனிதவளப் பிரிவின் அதிகாரிகளுடன் பேசி, என் தொழிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தேன்.
எங்கள் உறுப்பினர்களுடன் சேர்ந்து அவர்களின் இலக்கை அதிகரிக்கவும், அவர்களின் மனதிற்கு சற்று நிம்மதியை அளிக்கவும் இந்த நிறுவனத்துடன் இணைந்து எனக்கு பல நிகழ்ச்சிகளை செய்ய நிறுவனம் எனக்கு வாய்ப்பளித்தது. அவர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க “ஆதரணீய மாறிய” (அன்பே மரியா) என்ற மேடை நாடகத்தினை நடத்தினேன். அன்பையும் பாசத்தையும் நம்மிடமிருந்து பறிக்கும் ஒரு சமூகம் இருக்கிறது, அதைக் காப்பாற்ற “கப்சா” (கருக்கலைப்பு) என்ற நாடகத்தை மேடையேற்றினேன்.
வாழ்வினை உணர்த்தும் பாடல்கள், “சங்காயனா”, என்ற நிகழ்ச்சிகளை செய்தேன். எங்கள் சகோதரர்களின் வாழ்க்கை கதையை “அம்பலம” என்ற சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் செய்தோம். இதனால் அவர்களின் தொழில் முன்னேற்றம் அடைந்தது. எங்களிடம் எங்கள் திறமைகள் உள்ளன. நீங்கள் அனைவரும் உங்கள் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், நாங்கள் எமது திறனை உபயோகித்து நிறுவனத்திற்கு வேலை செய்ய முடிந்தால், எங்கள் தொழிலை சிறப்பாக செய்ய முடிந்தால், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் இலக்குகளுக்கு செல்ல முடிந்தால், அதுவே எங்கள் வெற்றி ஆகும். அதுவே நிறுவனத்தின் வெற்றியும் ஆகும். எனவே உங்கள் திறமைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்”