ஒரு தொழிலில் ஈடுபடும் எந்த ஒரு நபரின் குறிக்கோளும் அந்தத் தொழிலின் உச்சத்தை அடைய வேண்டும் என்பதுதான். ஒருவரின் தொழில் வாழ்க்கையில் இத்தகைய முன்னேற்றம் அடைய, ஒருவருக்கு நல்ல அர்ப்பணிப்பும் உறுதியும் இருக்க வேண்டும். பிராண்டிக்ஸ் குழும மனித வள பொது முகாமையாளர் திரு.சுரங்க கயான், இம்முறை வியமன் TV யில் “ஹந்துநாகத்தொத் ஒப மா” / “நீங்கள் என்னை அறிந்துகொண்டால்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
“நான் பிறந்தது ஹோமாகம, கிரிவத்துடுவ எனும் கிராமத்தில். என் குடும்பம் நான், அண்ணன் மற்றும் அம்மா, அப்பா. எனக்கு 14 வயது இருக்கும் போது, என் அம்மா இறந்துவிட்டார். என் அம்மா இறந்த பிறகு, அப்பா, தம்பி மற்றும் என் மீது அம்மாவின் பொறுப்புககள் சுமத்தப்பட்டன. இது என் வாழ்வின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. நான் எனது கல்வியை ஹோமாகம ஜனாதிபதி கல்லூரியில் ஆரம்பிக்கிறேன். புலமைப்பரிசில் சித்தியடைந்த பின்னர் கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் சேரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
என் அம்மா இறப்பதற்கு முன், நான் பெற்ற அறிவை வேறொருவருடன் பகிர்ந்து கொள்ள சிறுவயதில் இருந்தே என்னை ஊக்குவித்தார். பாடசாலை சென்று வந்த பிறகு, நான் கற்றுக்கொண்டதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். இன்றும் அந்த விஷயங்கள் என்னைப் பிரதிபலிக்கின்றன என்று நான் நினைக்கிறேன்.
நான் 2001 இல், தற்செயலாக ஆடைத் தொழில் துறைக்கு வந்தேன். 2011 முதல் இன்று வரை, நான் பிராண்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இந்த நேரத்தில் என் முன்னேற்றத்திற்கு ஒரு ரகசியம் உள்ளது, நான் முயற்சித்த ஒன்று எனக்கு மேலே உள்ளவரின் வேலையின் சில பகுதியைச் செய்வது தான். இதன் மூலம் நான் அடுத்த நிலையில் பணியாற்றும் திறன் கொண்டவன் என்பதை எப்போதும் நிரூபித்து காட்டமுடிந்தது.
நிறுவனத்திற்குள் எங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை 100% நிறைவேற்றும் அதே வேளையில் அதையும் தாண்டி ஏதாவது செய்ய நாம் முயற்சி செய்ய வேண்டும்.”