இலங்கையில் முன்னணி ஆடை ஏற்றுமதி நிறுவனமான பிரண்டிக்ஸ், உயர்தர ஆடைகளை உற்பத்தி செய்து வருவதுடன், ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு குறித்தும் அக்கறை கொண்டுள்ள நிறுவனமாகும். 2022 தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார வாரத்திற்கான இலங்கை மாநாட்டிற்கு பிரண்டிக்ஸ் பத்தாவது தடவையாகவும் அனுசரணை வழங்க முடிந்ததை குறித்து நாம் பெருமை அடைகின்றோம்.
தொழிலாளர் அமைச்சகத்தின் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான தேசிய நிறுவனம் (NIOSH) ஏற்பாடு செய்திருக்கும் தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார வாரத்தின் கருப்பொருள் ‘முகாமைத்துவ அமைப்புகள் மூலம் பாதுகாப்பை அடைதல்’ என்பதாகும். இக் கருப்பொருளுக்கு ஏற்ப, இந்த மாநாட்டின் நோக்கம் பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவற்றை மேலும் மேம்படுத்துவதும் ஆகும்.
இந்த ஆண்டு மாநாட்டின் வெள்ளி அனுசரணையாளரான பிரண்டிக்ஸ் குழுமத்தின் பிரதிநிதித்துவம் செய்து தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார குழுமத்தின் தலைவர் திரு. அசங்க பாலம்கும்புர மாநாட்டில் உரையாற்றினார், மேலும் பிரண்டிக்ஸ் குழுவாகிய நாம் எதிர்காலத்திலும் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட தயாராக இருக்கிறோம்.