புதிய தொடக்கத்திற்கு தயாராவோம்

2022 ஆம் ஆண்டு மிக வேகமாக நகர்ந்து இந்த ஆண்டின் இறுதியை எட்டியுள்ளோம். கிறிஸ்துமஸின் அரவணைப்புடன், 2023 புத்தாண்டை வரவேற்க நாம் காத்திருக்கிறோம். இந்த ஆண்டின் இறுதியில், நீங்கள் அதிகம் சிந்தித்துப்பார்க்காத, ஆனால் மிக முக்கியமான விடயம் ஒன்றை, வியமன் TVயின் “பிபிதுனு திவியக்”/ “விழித்தெழுந்த வாழ்வு” நிகழ்ச்சியின் மூலம் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். பிரண்டிக்ஸ் வந்துபிட்டிவள நிறுவனத்தின் சிரேஷ்ட மனநல ஆலோசகர் திருமதி.நதிரா பிரஷன்சனி இந்த நிகழ்ச்சியில் இணைந்தார்.

“டிசம்பர் என்பது மிகவும் அழகான மாதம். ஆனால், இது ஆண்டின் இறுதி ஆகும். இந்த வருடம் முழுவதும், சில நேரங்களில் நம் வாழ்வில் பல விஷயங்கள் மாறி இருக்கலாம். இதைவிட நான் சில விஷயங்களைச் சிறப்பாகச் செய்திருக்கலாம் அல்லது இது நடக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நீங்கள்

சில விடயங்களை நினைக்கலாம். இவை அனைத்தையும் சரிசெய்து ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைகிறது.

அதனால், இந்த வருஷக் கடைசியில் ஒரு சிறிய விஷயம் சொல்லலாம் என்று நினைத்தேன். எவ்வளவு சிறப்பான செயல்களை செய்தாலும் சில சமயங்களில் நம் அன்புக்குரியவர்களை மறந்து விடுகிறோம். சில சமயம் அம்மாவிடம் ‘உங்களுக்கு  களைப்பாக  இருக்கிறதா?’ என்று கேட்க மாட்டோம். சில சமயம் மனைவி அல்லது கணவன் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது நமக்குப் புரியாது. எனவே, நாம் அவர்களுக்கு ஒரு சிறிய வார்த்தையில் உதவி செய்தால் அல்லது ஒரு சிறிய வேலையில் அவர்களுக்கு உதவ முடிந்தால் , அது மிகவும் விலைமதிப்பற்றது.

நாம் அனைவரும் ஒரே குடும்பம். எல்லாவற்றையும் பற்றி நினைப்பது போல் நம் அன்புக்குரியவர்களைப் பற்றி சிந்திக்க முடிந்தால், நம் வாழ்க்கையில் எல்லா நாட்களையும் அழகான நாட்களாக  நினைவில் கொள்ள முடியும். இந்த கிறிஸ்துமஸை அழகாக கொண்டாடுவது போல அன்பார்ந்த கிறிஸ்துமஸாக மாற்ற முடியும், மேலும் இந்த புத்தாண்டை அன்புடன் வரவேற்போம், எங்கள் அன்புக்குரியவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக செலவிடுவோம்.”