பூமியின் பெரும்பகுதி நீரே !
ஆயினும் பாரினில் குறைந்து விட்டது இன்றே
மாரியைத் தேக்கி வைத்தனர் அன்றே
மறந்து விட்டனர் நாகரிகம் அடைந்ததனாலே
நீர் இன்றி அமையாதது உலகே
நிலை மாறிவிடும் அதனாலே
தேக்கி வைக்காமல் நீரை வீணே
ஆழியில் சேர்த்தனர் முட்டாள்கள் போலே
நிலத்தடி நீரும் வற்றி விட்டது
நீல மேகமும் சூழ்ந்து விட்டது
பசுஞ் சோலைகளும் எனோ அதனால்
பாலைவனமாய் மாறுகின்ற காலமும் ஆனது
போத்தலில் தண்ணீரும் போட்டு விற்பதனால்
நாட்டில் ஏழையின் கண்ணீரும் கூடியது
நாளைய தலைமுறையும் நீரின்றி வாடிடவே
உலகினில் உதயமாகும் மூன்றாம் யுத்தமும்
இயற்கையை நேசித்தே இன்பமும் காண்போம்
இடர்களைத் தவிர்த்தே நிம்மதியும் பெறுவோம்
இறைவனின் கொடையெனக் கிடைத்திடும் நீரையே
அனைவருக்கும் வேண்டியே அளவோடு பயன்படுத்திடுவோம்
K. மேனகா