நீர் இன்றி நாம் இல்லை

நீர் இன்றி நாம் இல்லை

பூமி வெக்கையில் அழுகிறது – மனிதன்

மதியினால் தீமை மமதை பொங்கி

மாண்பும் அழிகிறது – இங்கு

மண்ணும் சுடுகிறது

 

மனிதன் பொய்த்தால் வானம் பொய்க்கும்

பாடம் கிடைத்ததடி – நதியும்

பாடை ஆனதடி – மரமும்

கனிகள் தரவில்லை என்றால் – பூமி

காடாய் போகுமடி – தண்ணீர்

கானல் ஆகுமடி

 

நிறைமணல் கொள்ளோயடித்தால்

நதியில் நீரும் தீயாகும் – மிச்ச

நீரும் நீராகும் – விழிகள்

கண்ணீர் ஊற்றாகும்

 

காக்கை தட்டிய மண்டலம் – அன்று

காவிரி ஆனதடி – இன்று

கானல் ஆனதடி – மனிதன்

போக்கை மாற்றாவிட்டால்

பூமி சாகுமடி  – நம்மை

குடித்திடும் தாகமாடி 

 

அருவியின் இசை காதோரம் உரசுமடி

இயற்கையின் காதல் ஈரமாய் போனதடி

ஞானம் அது விழிப்பூட்டும்

விரயமின்றி நீரினை வீணாக்காதே என்று

 

வாழும் போதே வாழக் கற்றுக்கொள்

இயற்கையையும் கற்றுக்கொள்

 

ம. சுமங்களாதேவி

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *