உயர் தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ள அக்‌ஷிகா

உயர் தரப் பரீட்சையில் சாதனை படைத்துள்ள அக்‌ஷிகா

அக்‌ஷிகா அவர்கள் 2019 கபொத உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவரும் வரையும் மட்டக்களப்பிலுள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். மிகவும் திறமைசாலியான அவர் தற்போது உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்து, உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்பத் துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளதோடு, கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிகச் சிறந்த திறமையை வெளிப்படுத்திய அவருக்கு, ‘ரன் தரு அபிஸ்’ (Ran Daru Abhises) புலமைப்பரிசில் பிரண்டிக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்ற மாணவர்களுக்காக இப்புலமைப்பரிசில் திட்டத்தை பிரண்டிக்ஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அக்‌ஷிகா அவர்கள் கல்வியில் மட்டுமன்றி, பிரண்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சமயத்திலும் தனது திறமைகளை காண்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


முதலாவது ‘ரன் தரு அபிஸ்’ புலமைப்பரிசிலை வழங்கி வைக்கும் நிகழ்வு, சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் 1 ஆம் திகதியன்று கல்வியமைச்சரான கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இப்புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முதலாவது புலமைப்பரிசிலைப் பெற்றுக்கொண்டவர் அக்‌ஷிகா என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த திறமைமிக்க 18 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.


உள்நாட்டு மாணவர்களுக்கு உதவும் முகமாக, இதை விட மேலும் பல செயல்திட்டங்களையும் பிரண்டிக்ஸ் ஆரம்பித்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் ‘ரண் தரு புலமைப்பரிசில்’ என்ற பெயரில் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்விக்காக, 5 ஆம் தர புலமைப்பரிசில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தியடையும் மாணவர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன. 2016 ஆம் ஆண்டில் ‘ரன் தரு திலின’ என்ற செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், நிறுவன ஊழியர்களின் பாலர் பாடசாலை முதல் தரம் 5 வரை கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு புத்தகப் பைகள் மற்றும் ஏனைய பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறே, 2018 ஆம் ஆண்டில் ‘ஷில்ப’ என்ற செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தரத்தில் சித்தியடையத் தவறும் மாணவர்களுக்கு தொழிற்திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *