'பிராண்டிக்ஸ் எமதுத்துவம்'

'பிராண்டிக்ஸ் எமதுத்துவம்'

அன்புள்ள உறுப்பினர்களே,

பிராண்டிக்ஸில், எங்கள் பொதுவான குறிக்கோள் விழித்தெழுந்த மக்களிடமிருந்து ஈர்க்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதாகும். இது எங்களிடம் உள்ள ஒரு சிறந்த குணாம்சமாகும். எங்கள் குழுமம்  மூலம் இதை அறிவித்து பலப்படுத்தியதனை முன்னிட்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

2020 ஆம் ஆண்டில் நாம், மரியாதை, நேர்மை, குழு உணர்வு மற்றும் சிறப்பு போன்ற புதிய நிறுவன மதிப்புகளைப் புகுத்தினோம். இதன் மூலம் நாம் எதிர்பார்த்தது உற்பத்தி செயல்முறைக்கு அப்பாற்பட்ட பன்முகத்தன்மை மற்றும் பல்வேறு கருத்துக்களுடன் இணைந்து நாம் பணியாற்றுவதையே. அதேபோல் புத்தாக்கம், கற்றல் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான இடைவிடாத முயற்சியாகும். இது எளிதான பயணம் அல்ல, பணிச்சூழலில் ஒருவருக்கொருவர் பொறுப்புக்கூறல் கொள்கையுடன் முன்னோக்கி செல்ல நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இன்று, பிராண்டிக்ஸ் மற்றும் நாங்கள் இருக்கும் நிலையை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு ஆடை வர்த்தக நிறுவனத்திலிருந்து சுமார் அறுபதாயிரம் ஈர்க்கப்பட்ட  உறுப்பினர்களைக் கொண்ட உலகளாவிய அமைப்பாக நாங்கள் எப்படி வளர்ந்துள்ளோம் என்பதை இங்கே நான் நினைவு கூற  விரும்புகிறேன். எங்கள் வளர்ச்சி ஒரு சாதனை அல்ல, அது  வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் எங்கள் குழு உறுப்பினர்கள் அனைவரையும் பிணைக்கும் ஒரு விடயம் ஆகும். இந்த மதிப்புகளை நிலைநிறுத்துவதன் மூலம், நாங்கள் எங்கள் குழுவை வளர்த்து, சந்தை வெற்றிக்கான வலிமையையும், சமீபத்திய உலகளாவிய வர்த்தக நாமங்களுக்கான தீர்வுகளை வழங்குவதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொண்டுள்ளோம்.

ஒரு வணிகமாக வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். எமது “மனுசத்கார ” (மனிதாபிமானம்) போன்ற சமூக நலத் திட்டங்கள் மூலம் சமுதாயத்தை ஊக்குவிக்க எம்மால் முடிந்தது. ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எமது முயற்சியில், ‘பசுமை நிலைத்தன்மை’ போன்ற எதிர்காலத்திற்கான நமது திட்டங்களால் சிறப்பிக்கப்படுகின்றன.

நாம் யார், நமது மதிப்புகள் என்ன என்பதை பெருமையுடன் நினைவுகூர இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவோம். இந்த பயணத்தில் எங்களால் முடிந்ததைச் செய்வதாகவும், பல ஆண்டுகளாக குழுவின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் எங்களுக்கு கிடைத்த ஆதரவின் மூலம் ஒருவருக்கொருவர் ஊக்கமளிப்பதாகவும் உறுதியளிப்போம் .

பிராண்டிக்ஸ் ‘எமதுத்துவத்தை’ ஒன்றாகக் கொண்டாடுவோம்.

அஷ்ரஃப் உமர்
குழும  தலைமை நிர்வாக அதிகாரி

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *