கொரோனா விழிப்புணர்வு

கொரோனா விழிப்புணர்வு

கொரோனா” வைரஸ் 2019இன் இறுதியில் சீனாவில் வுஹானில் வெளிப்பட்டது. அங்கு இறைச்சி அங்காடியில் நிறைய பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆக்க பூர்வமாக சார்ஸ் சி. ஓ. வி. 2 என கூறப்படும். இந்த கொரோனா வைரஸ் ஆரம்பம் எது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவில் பரவாத தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அந்தாடிக்கா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவி விட்டது. இந்த வைரஸ் தோற்றால் இதுவரை உலகளவில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கோவிட் – 19 நோய்க்கு காய்ச்சலும், இருமலும் தான் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. உடல் வலிகள், தொண்டை வரட்சி, தலை வலியும் வரலாம் ஆனால் இவை வந்தாக வேண்டும் என்று கிடையாது. காய்ச்சலும் அசெளகரியமாக உணர்ந்தாலும் தொற்று பரவியதற்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினால் ஏற்றப்படக்கூடியவை. கொரோனா வைரஸ் இருமல் ஆரம்பத்தில் வறட்டு இருமலாகஇருக்கும் . பின்னர் வைரஸ் தொற்று ஏற்படும் போது செல்களில் எரிச்சல் தோன்றும் சிலருக்கு இருமலின் போது கெட்டியான சளி வெளியாகும்.

உலர்ந்த தொண்டை வலி, தலை வலி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புக்களும், வாசனை அறியும் தன்மை குறைவடைதலும்  சில அனுமானங்கள் கூறுகின்றன. சிலருக்கு கொரோனா தொற்று ஏட்பட்டிருந்தாலும் அறிகுறிகள் தென்படுவதில்லை.

சிறுவர்களுக்கு நிச்சயமாக கொரோனா வைரஸ் தாக்கும் இருந்தாலும் அவர்களுக்கு இலேசான அறிகுறிகள் தென்படலாம். முதியவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளில் இந்த நோயால் ஏற்படும் மரண விகிதம் குறைவாகத்தான் உள்ளது.

ஒரு நோய் பரவுதலுக்கு குழந்தைகள் அதிக காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்கள் நிறைய பேருடன் விளையாட்டு மைதானங்களில் கலந்து பழகும் வாய்ப்பு இருப்பதும் இதற்க்கு ஒரு காரணமாகும்.

பெரும்பாலானவர்களுக்கு கோவிட் 19 லேசான அறிகுறிகளை மட்டுமே காட்டுகிறது. இருந்த போதிலும் 20சதவீதம் பேர் அதிக தீவிரமாக நோய்க்கு ஆட்படுகிறார்கள். இதில் ஒருவருடைய நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கிறது என்பது தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு எதிராக நோயாளி வெற்றிகரமாக போராடி மீண்டு விட்டார் என்றால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டதாக அர்த்தம். முதல் நிலையில் நோய் ஏற்பட்டு குணாமானதாக அறிவிக்கப்பட்டவருக்கு அந்த நிலையில் முறையாக பரிசோதனை செய்யாமல் அனுப்பியதால் தான் மீண்டும் அவர் நோயுறுவதற்கு காரணமாக இருக்கும்.

கொரோனா நோயின் பாதிப்பினால் நுரையீரல் அழற்சி, நிமோனியா  போன்றனவும் ஏற்படுகிறது. சிறந்த சிகிச்சைகள் அளித்தும் நோயாளிகள் இறக்கிறார்கள். கொரோனா நோயினால் இறந்த முதலாவது நபர் 61 வயதான முதியவர் ஆவார். இவர் சீனாவில் ஊஹான் மாகாணத்தில் ஜின்யின்டன் மருத்துவமனையில் இறந்தார். இவரை மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்ட சமயத்தில் தீவிர நிமோனியா பாதிப்பிற்கு ஆளாகியிருந்தார். அவருக்கு தீவிர மூச்சு திணறல் இருந்தது. வெண்டிலேட்டர் வைத்த பிறகும் அவருடைய நுரையீரல் செயல் இழந்து விட்டது. இதயம் துடிப்பை நிறுத்திக்கொண்டது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 நாட்களில் இறந்து போனார்.

இலங்கையில் முதலாவது கொரோனா தொற்று 2019 ஜனவரி 27ம் திகதி அடையாளம் காணப்பட்டது. சீனாவினைச் சேர்ந்த பெண்ணொருவரே இந்த தொற்றுக்கு ஆளாகி இருந்தார். குறித்த பெண் அங்கொடை பகுதியிலுள்ள ஐ.டி.எச் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் முறைகள்.

அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மலின் போது கைக்குட்டைகளைப் பயன்படுத்துதல். பயன்படுத்திய Tissue பேப்பரை உரிய முறையில் அகற்றுதல், கையை மூக்கு, கண் மற்றும் வாய் பகுதி அருகே எடுத்து செல்வதை தவிர்த்தல்.  உடல் நிலை சரியில்லா நபர்கள் அருகே நெருக்கமாக செல்வதை தவிர்த்தல். சன நெருக்கடி உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல். எப்போதும் முகக்கவசம் அணிந்திருத்தல் போன்ற அடங்கும்.

நன்றாக கை கழுவு
ஒன்றாய் இருப்பதிலிருந்து நழுவு
பழைய உணவு முறைக்கு மாறு
தமிழர் பெருமைதனைக் கூறு
கை குலுக்குவதை விட்டுவிடு
கையெடுத்து கும்பிடு
கொரோனா வராது என நம்பிடு
கூட்டமதை தவிர்த்திடு
கொரோனாவை விரட்டிடு

கொரோனா நோய் இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் , தனிமை படுத்தல் 2 வகைப்படும் (01) அரசாங்கம் ஏற்பாடு செய்த அறைகளில் தனிமைப்படுத்தப்படல்  (02) நோய் தொற்று உள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தால் சுய தனிமைப்படுத்தல்

நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் அந் நோய்தொற்றுக்கு உள்ளவர் மாத்திரம் அரசாங்கம் ஏற்பாடு செய்த வைத்தியசாலை மற்றும் தனிப்பட்ட அறைகள் போன்றவற்றில்  தனிமைப்படுத்தப்படல்

நோய்த் தொற்று உள்ள ஒருவருடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தால் தாம் வசிக்கும் வீடுகளிலே குடும்ப அங்கத்தவர்களுடன் சுய தனிமை படுத்தப்படல்.

கொரோனா நோய் பரவியதனால் உலக நாடுகள் பல சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது.

தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வி பயிலும் சிறுவர்கள் தமது படிப்பாற்றலினை தொடரமுடியாமல் உள்ளது.

விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பசளை வகைகளினை இறக்குமதி செய்ய தாமதம் ஏற்படுத்துவதனால் பெரிதும் சிரமப்படுகிறார்கள் மற்றும் அறுவடை செய்த விளை பொருட்களை பயணத் தடை காரணாமாக வெளி இடங்களுக்கு விற்பனை செய்ய கொண்டு போக முடியாமல் சிரமப் படுகிறார்கள்.

அரசாங்கத்திற்க்கு அதிகளவு பொருளாதாரத்தினை பெற்றுத் தரக்கூடிய தொழிற்ச்சாலைகளை தற்காலிகமாக மூடுவதனால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படுகிறது. (உதாரணம் – brandix ஆடைத் தொழிற்ச்சாலை)

நாளாந்த வேளைகளில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் சாதாரண குடி மக்களும் பயணத்தடை மற்றும் ஊரடங்கின் மூலம் தமது வாழ்வினை முன்னேற்றத்துக்கு கொண்டு செல்ல முடியாதுள்ளது.

உலகில் பல ஆய்வகங்களில் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இணைந்து  கொரோனா  தொற்றுக்கு எதிராக மருந்துகள், தடுப்பூசி வகைகளை கண்டுபிடித்து உலகளாவிய ரீதியில் மக்களுக்கு செலுத்தி இந்த மருந்துக்களின் வீரியம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.  பாதுகாப்பான தடுப்பூசிகள் தயாரிக்க ஓரிரண்டு வருடங்கள் எடுக்கும் . சிறந்த தடுப்பூசிகள் தயாரிக்கும் வரை அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் .

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

S.அநுஜா
மட்டக்களப்பு பிராண்டிக்ஸ் நிறுவனம்

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *