காலத்திற்கும் உன்னை மறந்து விட்டோம்

சுத்தம் செய்ய பயன்படுவாய்!

உயிர்கள் வாழவும் வழி செய்தாய்!

வாடி பயிருக்கும் உயிர் கொடுப்பாய்!
 
துளியும் தெளிவில்லாமல் பின்வரும்

சந்ததிகளை நினைக்காமல் உனை

வீண் செலவு செய்தோம்!
 
காலத்திற்கும் நீ தேவை என மறந்து விட்டோம்!!
 
மண்ணில் விதையாக விழும் உனை

விளையாட்டாக நினைத்து விட்டோம்!
 
மொத்த ஜீவன்களுக்கெல்லாம்

உயிர் கொடுக்கும் உனக்கு

என்ன செய்தோம்!!

Facebook