ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் மற்றும் விலங்குகள் அனைத்திற்கும் உயிர்வாழ்வதற்கு காடுகள் முக்கிய ஆதாரமாக உள்ளன. பச்சை நிறத்தால் முழு பூமியைய்யும் மூடிக்கொண்டிருக்கும் காடுகளின் மூலம் தான் உலகத்தின் உயிர் மூச்சு அடங்கியுள்ள்ளது. ஆனால் காலப்போக்கில், மக்கள் தொகை பெருக, காடுகள் அழிக்கப்படுவதால், உலகின் காடுகளின் பரப்பளவு வேகமாக குறைந்து வருகிறது.
எனவே, குறைந்து வரும் இந்த வனப் பரப்பை உயர்த்தி, வனப் பாதுகாப்பில் உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி ஆண்டுதோறும் மார்ச் 21ஆம் தேதி சர்வதேச வன தினம் கொண்டாடப்படுகிறது. நமக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற மரங்கள் தேவை, அவ்வாறே நமது குடிநீர்த் தேவைகள் கூட காடுகளுடன் தொடர்புடைய நீர் ஊற்றுக்களின் மூலம் தான் சாத்தியமாகின்றன. காடுகள் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அதே காரணிகள் உறுதிப்படுத்துகின்றன.
சிகப்இந்திய தலைவரான சியாட்டில் ஒருமுறை இவ்வாறு கூறினார்: “நாம் பூமியின் ஒரு பகுதி ஆவோம். பூமி நம்மில் ஒரு பகுதி ஆகும். மணம் வீசும் பூக்கள் நம் சகோதரிகள். மான்கள், கழுகுகள் மற்றும் குதிரைகளும் நமது சகோதரர்கள். மலைகளிலிருந்து புல்வெளிகளுக்கு ஓடும் நீரோடைகள், குதிரை மற்றும் மனித உடலின் வெப்பம் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. காடும், நாமும் சுற்றுச்சூழலும் ஒரே குடும்பம், தனித்தனியாக வாழ முடியாது.
ஒவ்வொரு வருடமும் இலங்கை ஆயிரக்கணக்கான ஹெக்டேர் காடுகளை இழக்கிறது. அந்த சூழ்நிலையில் இலங்கையின் இயற்கையான காடுகள் தற்போது 29.2% ஆக உள்ளது. காடுகளை அழிப்பதால் காடுகளில் வசிக்கும் விலங்குகளை கூட நாம் இழந்து வருகிறோம். சில தேசிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் கூட உலகில் அழிந்து வருவதற்கு காடழிவு ஒரு முக்கிய காரணமாகும்.
பிராண்டிக்ஸின் உறுப்பினர்களான, உங்களுக்கு காடுகள் மற்றும் தாவரங்களின் மதிப்பை மிகைப்படுத்த வேண்டியதில்லை. ஏனெனில் பசுமையான நிலைத்தன்மையின் மூலம் பூமித்தாயை பாதுகாக்கும் கொள்கையினால் பெரும் பங்கு வகிப்பதனால். வருங்கால சந்ததியினருக்கு இந்தப் பூமிப் பெண்ணின் பச்சைப் பளபளப்பான மேலங்கியை நெசவு செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.