மண்ணுக்குள் உன்னை சேமித்து வைக்க மறந்து விட்டோம்
உன்னை சோதிக்க விண்கலத்தை அனுப்பி வைத்தோம்
ஆழ்கடலில் உன்னை அனாதையாக துரத்தி விட்டோம்
ஆகாயத்தில் உன்னை வரவைக்க ரசாயனத்தை தூவி வைத்தோம்
குளம் குட்டைகளை தூராமல் உன்னை வழிய விட்டோம்
ஆயிரம் அடிகள் தோன்றி உன்னை பார்க்க ஆசைப்பட்டோம்
துளியும் தெளிவில்லாமல் உன்னை வீணாக செலவு செய்தோம்
போத்தல் குடிநீருக்காக இன்று காத்திருக்கிறோம்
காலத்துக்கும் நீர் தேவை என்று உணராமல் உன்னை மறந்து விட்டோம்
இனி வரும் சந்ததிகளை நினைக்காமல் உன்னை அழித்து விட்டோம்
பல பல கட்டிட மாடிகளை அடிக்கி அடிக்கி கட்டி வைத்தோம்
உன்னை தேக்கி வைக்க ஒரு தொட்டியை கட்டி வைக்க தவறி விட்டோம்
உயிருக்கு கேடு வர வைக்கும் மதுபானத்திற்கு உன்னை அடகு வைத்தோம்
உன்னை நம்பிய விவசாயத்துக்கு கேடு வைத்தோம்
மண்ணில் விதையாக விழும் உன்னை விளையாட்டாக நினைத்து விட்டோம்
வீதியில் வந்து போராடும் போதுதான் தெரிந்தது உன் அருமை
தொலைதூர திட்டத்திற்கு எல்லாம் பணத்தை வாறி வாறி இறைத்தோம்
மொத்த உயிருக்கெல்லாம் உயிர் கொடுக்கும் உனக்கு என்ன செய்தோம் …
(மரம் இன்றி நீர் இல்லை நீர் இன்றி மழை இல்லை மழை இன்றி இவ்வுலகில் எவரும் இல்லை )
பவித்திரா