நமது உயிர்நாடி இயற்கையாகும். எனவே, நமக்கு உயிரைக் கொடுக்கும் இயற்கையை எம்மால் முடிந்தவரை பாதுகாக்க வேண்டும். இயற்கையின் உண்மையான மதிப்பை நன்கு அறிந்த ஒரு நிறுவனம் என்ற வகையில், எமது பிராண்டிக்ஸ் குழு எப்போதும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் எங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.
சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், சாதனைகள் மற்றும் மதிப்பீடுகள் பிராண்டிக்ஸ் குடும்பமாகிய எமக்கு புதிதானதோ அல்லது அறிமுகமில்லாததோ அல்ல. நாங்கள் எங்கள் தயாரிப்பு இலக்குகளை அடைந்து அதற்குரிய விருதுகளை வென்றாலும், மறுபுறம் சமூக சேவைகளுக்கான விருதுகளையம் வென்றுள்ளோம். சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்து நாங்கள் தொடங்கியுள்ள திட்டங்களின் தொடர் தான் நமது சமூகப் பணியின் மகத்தான விடயமாக கருதப்படுகின்றது. சுற்றுச்சூழலுடன் பிராண்டிக்ஸ் குடும்பத்தின் தொடர்பானது நகமும் சதையும் போன்றது. அதனால்தான் எங்கள் உற்பத்தி இலக்குகளை அடையும்போது, சுற்றுச்சூழலுக்கான நமது கடமைகளையம் ஒன்றுபோல் நிறைவேற்ற நாம் வழிவகுத்திருக்கின்றோம்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான எங்கள் மகத்தான முயற்சி 2007 இல் ஆரம்பமானது. அது சீதூவ பசுமை தொழிற்சாலையை ஆரம்பிப்பதன் மூலம் தொடங்கிவைக்கப்பட்டது. அதே ஆண்டு நாம் அந்த தொழிற்சாலைக்கான சர்வதேச விருதை வென்றோம். அமெரிக்க பசுமை கட்டிட கவுன்சிலின் பசுமை கட்டிட மதிப்பீட்டு முறையிலிருந்து லீட் பிளாட்டினம் விருதை வென்ற உலகின் முதல் ஆடை தொழிற்சாலையாக இது அமைந்தது. அதுவே நமது பசுமைப் புரட்சியின் தொடக்கமும் அதற்காக நாங்கள் பெற்ற முதல் விருதும் ஆகும்.
அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டில் நாம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான விருதை வென்றோம். இது ரத்மலானாவில் உள்ள பிராண்டிக்ஸ் எசென்ஷியல்ஸ் மைய வளாகம் தொடர்பானதாகும். அமெரிக்க பசுமைக் கட்டிட கவுன்சிலின் பசுமை கட்டிட மதிப்பீட்டு முறையிலிருந்து லீட் தங்க விருதையும் வென்றோம், இந்த விருதைப் பெற்ற இலங்கையில் முதல் வணிகக் கட்டடமாக இது அமைந்திருந்தது. 2009 அதே ஆண்டில் எமக்கு மற்றொரு சர்வதேச விருதும் கிடைத்தது. 2010 இல், சீதூவ பசுமை தொழிற்சாலை தேசிய ரீதியிலான விருதினால் அங்கீகரிக்கப்பட்டது.
மீண்டும் ஒருமுறை, 2011ல் லீட் தங்க விருதினால் அங்கீகரிக்கப்பட்டோம். இது எமது கொக்கலை எசென்ஷியல்ஸ் மையத்திற்கானதாகும். 2011 ஆம் ஆண்டில், சீதூவ பசுமை தொழிற்சாலை மறு மதிப்பீடு செய்யப்பட்டு, ISO 50001: 2011தரச் சான்றிதழை வென்றது. இந்த தரச் சான்றிதழின் சிறப்பம்சமானது உலகின் முதல் ஆடை உற்பத்தி தொழிற்சாலையாகவும் மற்றும் அனைத்து தொழிற் துறைகளிலும் உலகின் மூன்றாவது நிறுவனமாகவும் எமது சீதூவ பசுமை தொழிற்சாலை அமைந்ததாகும்.
2012 ஆம் ஆண்டில், எங்கள் குழுமம் சக்திச் செயல்திறனுக்காக நான்கு தேசிய விருதுகளை வென்றது. அதனைத்தொடர்ந்து, 2013 இல் இரண்டு விருதுகளை வெல்லும் வாய்ப்பு எமது குழுமத்திற்கு கிடைத்தது. சுற்றுச்சூழல் குறித்த மூன்று தேசிய அளவிலான விருதுகளை வென்ற ஆண்டாக 2014 ஆம் ஆண்டு எங்கள் விருதுகளின் பட்டியலில் இணைகிறது. 2015 ஆம் ஆண்டு நாங்கள் வென்ற இரண்டு விருதுகளும் தலைமையக வளாகத்திற்கானதாகும்.
தொடர்ந்தும், 2018 ஆம் ஆண்டில், எங்கள் மட்டக்களப்பில் அமைந்துள்ள எசென்ஷியல்ஸ் மையம் லீட் பிளாட்டினம் விருதால் அங்கீகரிக்கப்பட்டது, இது உலகின் இரண்டாவது பெரிய பிளாட்டினம் விருது வென்ற நிறுவனமாகுவது இதன் சிறப்பமசமாகும். அதே ஆண்டில், நிறுவனம் தேசிய ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்டது. மேலதிகமாக, பூஜ்ஜிய அளவிலான கார்பன் உமிழ்வை பராமரிக்கும் உலகின் முதல் ஆடை நிறுவனமாக இந்நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு வரலாற்றில் இடம்பிடித்தது.
விருதுகள் எதிர்பார்க்கப்படவில்லை என்றாலும், சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலான எமது சமூகத்தின் அங்கீகாரம் நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான எமது முயற்சிகளின் வெற்றிக்கு ஒரு சான்றாகும். அத்தகைய குறிக்கோள்களைக் கொண்ட ஒரு குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நாங்கள் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்.